விமல் பட தயாரிப்பாளர்களுக்கு இனி கவலை இல்லை..!

Bookmark and Share

விமல் பட தயாரிப்பாளர்களுக்கு இனி கவலை இல்லை..!

கடந்த ஜனவரியில் விமல் நடித்த ‘மன்னர் வகையறா’ படம் வெளியாகி 25 நாட்களாக வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கிறது. அதன்பிறகு வெளியான படங்கள் கூட தியேட்டரில் இருந்து வெளியேறிவிட்ட நிலையிலும், போட்டிக்கு புதிதாக பல படங்கள் வெளியான நிலையிலும் ‘மன்னர் வகையறா’வுக்கான வரவேற்பு இன்னும் குறையவே இல்லை என்கிறார்கள் வினியோகஸ்தர்கள். 

மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய விமலும், படத்தை இயக்கிய பூபதி பாண்டியனும் இந்த வெற்றிக்கு முக்கிய காரணம் என்றாலும் இதன் பின்னணியில் வெற்றிக்கான முக்கிய தூணாக இருந்துவருபவர் தான் விநியோகஸ்தரும் தயாரிப்பாளருமான சிங்கார வேலன்.

குறிப்பாக ‘மன்னர் வகையறா’ பட ரிலீசின்போது விமலின் ‘ஜன்னலோரம்’ பட இழப்பீடு விவகாரம் தலைதூக்க, தனது கையில் இருந்து 2 கோடி ரூபாய் கொடுத்து எந்தவித சிக்கலுமின்றி ‘மன்னர் வகையறா’ வெளிவர உதவினார் சிங்காரவேலன்.

அடுத்ததாக விமலின் நடிப்பில் தயாராகிவரும் ‘கன்னிராசி’ படத்தை வெளியிடும் உரிமையையும் சிங்காரவேலனே வாங்கியுள்ளார். படம் மார்ச் மாதம் வெளியாகிறது. 
அதுமட்டுமல்ல, இனி விமல் நடிக்கும் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களுக்கு பைனான்ஸ் கொடுத்து உதவிக்கரமும் நீட்ட முன்வந்துள்ளார் சிங்காரவேலன்.

மேலும் அப்படி தயாராகும் விமலின் படங்களை வெளியிடும் உரிமையையும் தானே வாங்கிக்கொள்ளவும்  செய்கிறாராம் சிங்காரவேலன்.  


Post your comment





Related News
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!
நமது அரசியல் சூழலை நய்யாண்டித்தனமாக கையாளும் காமெடி படம் 'அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா'
கிங் மூவி மேக்கர்ஸ் பெருமையுடன் வழங்கும் ‘கன்னி ராசி’
ரசிகர் மன்ற கூட்டத்தில் ரஜினி பங்கேற்கவில்லை
அஜித்தை பார்த்தே ஆக வேண்டும்: புருனே இளவரசியின் ஆசை
அடுத்த ஆச்சி இவங்க தான்.. நடிகை ரேகா உருக்கம்
டைரக்டர்களிடம் கடிந்து கொள்ளும் வடிவுக்கரசி!
நடிகர் அருள்நிதி திருமணம்: நடிகர்கள், அரசியல் தலைவர்கள் வாழ்த்து
அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா...!
மீண்டும் ரசிகர் மன்றம்: அஜித் அதிரடி..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions