கன்னடத்திலும் வசூலில் கலக்க வரும் மஞ்சப்பை!

Bookmark and Share

கன்னடத்திலும் வசூலில் கலக்க வரும் மஞ்சப்பை!

2014ம் ஆண்டு திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் மற்றும் சற்குணம் சினிமாஸ் தயாரிப்பில், விமல், ராஜ்கிரண், லட்சுமி மேனன் நடிப்பில் வெளியான படம் ‘மஞ்சப்பை’.

இப்படத்தை ராகவா இயக்கியிருந்தார். அனைத்து தரப்பு ரசிகர்களும் ரசிக்கும்படி இப்படம் உருவாகியிருந்தது. தாத்தா-பேரன் இடையேயான உறவை மையப்படுத்தி அழகாக திரைக்கதை அமைத்திருந்தார். இப்படம் அனைவரின் பாராட்டையும் பெற்று வசூலிலும் சாதனை படைத்தது. 

மஞ்சப்பை தற்போது கன்னடத்தில் "மிஸ்டர் மமகா" (மிஸ்டர் பேரன்) என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. இப்படம் இம்மாதம் வெளியாகவுள்ளது.

கன்னடத்திலும் இப்படத்தை ராகவா தான் இயக்கியுள்ளார். ரவி கௌடா, ஓவியா, ரங்கயனா ரகு ஆகியோர் நடித்திருக்கும் இப்படத்தின் பாடல்கள் சமீபத்தில் வெளியானது. இது நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் கூடியுள்ளது.

இப்படத்தை தவிர இயக்குனர் ராகவா தமிழில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பில் ஆர்யா, கேத்ரின் தெரசா நடிக்க மிகப்பெரிய பொருட்செலவில் பிரம்மாண்டமாய் புதிய படத்தை உருவாகி வருகிறார்.

இதன் முதல் கட்ட படப்பிடிப்பு தமிழ்நாடு மற்றும் கேரளா காட்டுப்பகுதிகளில் நடந்து முடிந்த நிலையில் தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் விரைவில் தொடங்கவுள்ளது.


Post your comment





Related News
முக்கிய படத்திற்காக ரஜினிகாந்த் பெற்ற அட்வான்ஸ் தொகை இவ்வளவு தானாம்! கேட்டால் நம்பமாட்டீர்கள்
பரபரப்பான சூழலிலும் ட்ரெண்ட் ஆகும் சர்கார் - விசியம் என்ன தெரியுமா?
அமைச்சர் கடம்பூர் ராஜுவிடம் மனு கொடுத்த 'ஒரு குப்பைக் கதை' மற்றும் 'மனுசனா நீ' தயாரிப்பாளர்கள்!
ஒரு குப்பைக் கதை படம் என் வாழ்கையில் ஒரு திருப்புமுணை நடிகர் கிரண் ஆர்யா
மைனா படத்தின் தாக்கத்தை உணர்ந்தேன் - ஒரு குப்பைக் கதை பற்றி உதயநிதி ஸ்டாலின் பேச்சு
என்னது தளபதி-62 படத்தில் இந்த நடிகையா? - அவரே வெளியிட்ட தகவல்.!
பாகுபலி குப்பை படம்! கேவலமாக பேசிய பிரபலம்
செக்ஸ் பற்றி பேசும்போது நான் க்யூட்டா இருக்கிறேன்: பியா பாஜ்பாய்
மாடர்ன் பசங்க கற்ப பத்தி கவலைபடமாட்டாங்க! நடிகை பியா சர்ச்சை கருத்து.
முகம் சுழிக்க வைக்கும் அஜித் பட நாயகியின் புகைப்படம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions