படத்தின் டைட்டிலை மாற்றிய போலீஸ் அதிகாரிகள்

Bookmark and Share

படத்தின் டைட்டிலை மாற்றிய போலீஸ் அதிகாரிகள்

விமல்-சமுத்திரகனி இணைந்து நடித்து வரும் படம் ‘நீயெல்லாம் நல்லா வருடா’. நீண்ட நாட்களாக தயாராகி வந்த இப்படம் தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. தற்போது இப்படத்தின் தலைப்பை காவல் என்று மாற்றியுள்ளனர்.

சில மாதங்களுக்கு முன்பு ‘நீயெல்லாம் நல்லா வருவடா’ படத்தின் முதல் முன்னோட்டம் வெளியிடப்பட்டது. படத்தின் முதல் முன்னோட்டத்தை பார்த்த பல திரைப்பட முன்னணி இயக்குனர்கள், நடிகர்கள் மற்றும் முன்னணி தயாரிப்பாளர்கள் வெகுவாக பாராட்டினார்கள்.

தொடர்ந்து நடைபெற்று வந்த படப்படிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியதும், படத்தின் முக்கிய பணிகள் விரைந்து நடைபெற்றன.தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்கள், உயர்நிலை போலீஸ் அதிகாரிகள் மற்றும் ஐ.ஏ.எஸ், ஐ.ஆர்.எஸ் போன்ற மற்ற துறைகளில் இருக்கும் பிரபலங்களை அழைத்து சிறப்பு காட்சி ஒன்றுக்கு தயாரிப்பு தரப்பு ஏற்பாடு செய்திருந்தது.

படத்தை பார்த்த திரை பிரபலங்கள், உயர் காவல் துறை அதிகாரிகள் மற்றும் பிற துறை அதிகாரிகள் இயக்குனரையும், தொழில் நுட்ப கலைஞர்களையும், படத்தில் நடித்த நடிகர் நடிகைகளையும், வெகுவாக பாராட்டி, இப்படம் அனைவரையும் கவரும் என்று வாழ்த்து கூறினார்கள்.

படத்தின் கதைக்கு ஏற்றாற்போல் இன்னும் ஏதுவான தலைப்பை வைத்தால் நன்றாக இருக்கும் என்று திரை பிரபலங்கள் ஆலோசனை கூறவே, நீண்ட கலந்தாய்வுக்கு பிறகு படத்தின் தலைப்பை ‘காவல்’ என்று மாற்றியுள்ளார்கள்.

இப்படத்தை ஆர்.நாகேந்திரன் இயக்குகிறார். இவர் சீமானுடனும், சுசிகணேசுடனும் இணை இயக்குனராக பணியாற்றியவர். இப்படத்தின் ஆடியோவை தமிழ்புத்தாண்டு தினத்தன்றும் 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions