ஆக்சன் கதைகளை விரும்பாத விமல்!

Bookmark and Share

ஆக்சன் கதைகளை விரும்பாத விமல்!

விமல் நடித்து வந்த நீயெல்லாம் நல்லா வருவடா என்ற படம்தான் தற்போது காவல் என்று பெயர் மாறியிருக்கிறது. சமுத்திரகனி முக்கிய போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள இந்த படத்தை ரொம்பவே எதிர்பார்க்கிறார் விமல்.

அதோடு, இப்படத்தில் போலீஸ் வேடத்தில் நடித்திருக்கும் சமுத்திரகனியின் நடிப்பும், அந்த படத்திற்காக அவர் எடுத்துக்கொண்ட ரிஸ்க்கையும் ரொம்பவே பெருமையாக பேசி வருகிறார்.

அவரிடத்தில், நீங்கள் எப்போது காக்கி சட்டை அணிந்து நடிப்பீர்கள்? என்று கேட்டால், காக்கி சட்டை போட்டு நடிக்கனும்னா ஒரு உடல்கட்டு வேண்டும். அது எனக்கு இல்லை.

அதனால் எனக்கு பொருந்தாத வேடத்தில் நடிக்க ஒருபோதும் நான் ஆசைப்படுவதுமில்லை என்கிறார். மேலும், களவாணி, வாகை சூடவா போன்ற கதைகள்தான் எனக்கு செட்டாகும்.

குறிப்பாக, காதல், காமெடி, ரொமான்ஸ் இப்படித்தான் என் ரூட் போய்க்கொண்டிருக்கிறது. அதுதான் எனக்கு பொருத்தமாகவும் இருக்கிறது. அதனால் நான் இதேபோன்று ஜாலியான கமர்சியல் ரூட்டில் தொடர்ந்து பயணிக்கவே விரும்புகிறேன் என்கிறார் விமல்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions