ராமராஜன் பாணி கதைகளுடன் விமலை சுற்றும் டைரக்டர்கள்!

Bookmark and Share

ராமராஜன் பாணி கதைகளுடன் விமலை சுற்றும் டைரக்டர்கள்!

பசங்க, களவாணி, வாகை சூடவா, கலகலப்பு, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற ஹிட் படங்களில் நடித்தவர் விமல். அதன்பிறகு அவர் நடித்ததில் மஞ்சப்பை மட்டுமே ஓரளவு அவருக்கு பெயர் வாங்கிக்கொடுத்தது. மற்றபடி பல படங்கள் தோல்வியடைந்தன.
அதனால், ஒரு கோடியில் இருந்து கிடுகிடுவென எகிறிச்சென்ற விமலின் சம்பளம் சமீபகாலமாக ஏற்றமும் இறக்கமுமாகத்தான் இருந்து கொண்டிருக்கிறது. அதோடு ரெண்டாவது படம், அஞ்சலா போன்ற படங்கள் வெளியாகாமல் கிடக்கின்றன.
இந்த நிலையில், மாப்ள சிங்கம், மன்னர் வகைறா போன்ற படங்களில் நடித்து வருகிறார் விமல். இந்த நேரத்தில், அவருக்கு ராமராஜன் பாணியில் கிராமத்து கதைகள் பண்ணி வைத்துக்கொண்டு சில டைரக்டர்களும் கதை சொல்லி வருகின்றனர்.
தற்போது இருக்கிற நிலவரத்தில் மெகா பட்ஜெட் கதைகளை விட களவாணி போன்று வில்லேஜ் கதைகளில் நடிப்பதுதான் நமக்கு சேப்டி என்று நினைக்கும் விமல், ராமராஜன் பாணி கதைகளில் நடிக்கவும் தயாராகிக் கொண்டிருக்கிறார்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions