சாட்டிலைட் விலைபோகாத விமல், விஜயசேதுபதி படங்கள்!

Bookmark and Share

சாட்டிலைட் விலைபோகாத விமல், விஜயசேதுபதி படங்கள்!

ஒரு காலத்தில் பெரும்பாலான நடிகர்களின் பட பூஜை போடப்பட்டதுமே அந்த படங்கள் விற்பனை ஆகி விடும். ஆனால் இப்போதெல்லாம் ஓரிரு ஹீரோக்களின் படங்களை தவிர மற்ற படங்களை பார்த்த பிறகுதான் விலை பேசுகிறார்கள்.

ஆனால், சாட்டிலைட் வியாபாரத்தைப் பொறுத்தவரை முன்னணி ஹீரோக்களின் படங்கள் என்றால் படப்பிடிப்பு நடக்கும் போதே விலை பேசப்படுகிறது. ஆனால் விலை மசியவில்லை என்றால் சில தயாரிப்பாளர்கள் படம் ரிலீசாகி ஓடினால் தாங்கள் கேட்டதை விட அதிக தொகை கிடைக்கும் என்று எகிறி பேசி விடுகிறார்கள்.

அந்த வகையில், விமல் நடித்த ஒரு ஊர்ல ரெண்டு ராஜா, விஜயசேதுபதி நடித்த வன்மம் ஆகிய இரண்டு படங்களையும் படப்பிடிப்பு நடந்தபோது சார்ட்டிலைட் உரிமை 4 கோடி கேட்டனர்.

ஆனால் சேனல்காரர்கள் அந்த தொகையை கொடுத்து படத்தை வாங்க முன்வரவில்லை. விளைவு, மேற்படி படங்கள் வெளியாகி ஓடாததால் இப்போது 50 லட்சம் கொடுத்து வாங்ககூட சேனல் உரிமையாளர்கள் தயாராகயில்லை.

அதனால், அவர்கள் 2 கோடிக்கு வாங்க முன்வந்தபோதே கொடுத்திருக்க வேண்டியது. மாறாக, 4 கோடி கேட்டு பிடிவாதம் செய்ததால் இப்போது இப்படி மோசம் போய் விட்டோம் என்று சம்பந்தப்பட்டவர்கள் புலம்பிக்கொண்டிருக்கிறார்கள்.


Post your comment





Related News
96 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
வட சென்னை கதையில் விஜய்சேதுபதி
அடுத்த கட்டத்திற்கு முன்னேறிய சூப்பர் டீலக்ஸ்
கேரள மக்களுக்கு தனுஷ்-விஜய் சேதுபதி கொடுத்த நிதி உதவி..!
சீதக்காதி, கலைக்கு முடிவே இல்லை என்பதை உணர்த்தும் படம் - விஜய் சேதுபதி..!
ரஜினியின் ஷூட்டிங் அடுத்து இங்குதான்! புதிய தகவல்
தென் தமிழகத்தின் மண் வாசனையுடன் வர இருக்கும் விஜய்சேதுபதி!
ரசிகர்களை மிகவும் கவர்ந்த விஜய் சேதுபதியின் அடுத்த அதிரடி!
என் முகத்தை யாருக்காவது பிடிக்குமா என்று கேட்டார் விஜய் சேதுபதி - சரண்யா பொன்வண்ணன்
அவனுங்கள நாக்கை புடுங்குற மாதிரி கேள்வி கேட்கணும் - முதல் முறையாக ஆவேசப்பட்ட விஜய் சேதுபதி.!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions