நாடகம் நடத்தும் சினிமா தயாரிப்பாளர்

Bookmark and Share

நாடகம் நடத்தும் சினிமா தயாரிப்பாளர்

எஸ்தர் எண்டர்டெயின்மெண்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் சட்டம் ஒரு இருட்டறை ரீமேக், சும்மா நச்சுன்னு இருக்கு படங்களை தயாரித்தவர் விமலா பிரிட்டோ. இயக்குனர் எஸ்.ஏ.சந்திரசேகரின் சகோதரி மகள். சட்டம் ஒரு இருட்டறை படத்தை இயக்கியர் இவரது மகள் சினேகா பிரிட்டோ.

சென்னையில் பல்வேறு கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் விமலா பிரிட்டோ நாடகக் கலையில் அதீத ஈடுபாடு கொண்டவர்.

சிறுவயதிலேயே தேவதை, அன்னை மேரி, ஏசு பிரான் நாடகங்களில் நடித்தவர். முறைப்படி நடனம் கற்றவர். உலகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து நாடங்களை பற்றிய ஆராய்ந்தவர்.

தனது பள்ளியைச் சேர்ந்த சுமார் 3 ஆயிரம் குழந்தைகளுக்கு நடிப்பு பயிற்றி அளித்து சாண்டில்யன் எழுதிய ராஜபேரிகை நாவலை நாடகமாக நடத்தியுள்ளார். இதுதவிர விங்ஸ் ஆஃப் லவ் என்ற ஆங்கில நாடகத்தையும் நடத்துகிறார்.

விரைவில் பள்ளி அல்லாத வெளி குழந்தைகளை கொண்டும் நாடகம் நடத்தி அதிக குழந்தைகள் நடித்த நாடகம் என்கிற வகையில் கின்னஸ் சாதனை படைக்க முடிவு செய்திருக்கிறார். அதோடு விரைவில் நாடக பயிற்சி மையம் ஒன்றை தொடங்கவும் முடிவு செய்திருக்கிறார்.


Post your comment





Related News
விமலா ராமனை கடவுளாக்கிய ரசிகர்கள்...!
மீண்டும் தமிழில் விமலா ராமன்
வாடி ராசாத்தி மூலம் புகழ்பெற்ற நீதிபதி மகன்
தமிழ்நாடு தெலுங்கு யுவா சக்தி நடத்திய “ YOUNG INDIA AWARDS”
சென்னையில் டான்ஸ் அகாடமி தொடங்குகிறார் விமலா ராமன்
மீண்டும் வருகிறார் விமலாராமன்
இளைஞர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் 'சட்டம் ஒரு இருட்டறை' படக்குழு!
சூடுபிடிக்கும் 3 பட விவகாரம்: தனுஷ் குடும்பத்தார் மீது புதிய மோசடி புகார்
அணையின் வரலாறு தெரியாம டேம் 999ல் நடித்துவிட்டேன்: விமலாராமன்
‘பில்லா 2’ - வில் அஜீத்துக்கு ஜோடியாக‌ மறுத்த நடிகை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions