விமலா ராமனை கடவுளாக்கிய ரசிகர்கள்...!

Bookmark and Share

விமலா ராமனை கடவுளாக்கிய ரசிகர்கள்...!

குஷ்புவுக்கு கோவில் கட்டியவர்கள், அடுத்ததாக நக்மாவிற்கு கோயில் கட்ட கடப்பாறையை தூக்கியவர்கள், நயன்தாராவுக்கு கோவில் கட்ட கல் எடுத்தவர்கள் என பிரபல நடிகைகளின் ரசிகர்களில் சிலர் தத்து பித்துவென ஏதாவது செய்துகொண்டு இருப்பது வாடிக்கை தான்..

ஆனால் எந்தவகையிலும் பாப்புலராக இல்லாத நடிகை விமலாராமனை அம்மானாக சித்திரித்து, விமலாயிசம் என்கிற ஹேஸ்டேக்கையும் உருவாக்கியுள்ளார்கள்.. இனி நீங்கள் தான் கடவுள் என்கிற ரேஞ்சுக்கு அதில் ஆராதனையும் செய்து வருகிறார்கள்.. இதற்கு நன்றி என விமலா ராமனும் ட்வீட்டில் பதிலளித்துள்ளார்..

ஆமாம் யார் இந்த விமலாராமன் என கேட்பவரா நீங்கள்..? கீழே படியுங்கள்...தமிழில் இயக்குனர் சிகரம் பாலசந்தர் இயக்கத்தில் 'பொய்' படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் தான் விமலா ராமன்.

அதன்பின் 'ராமன் தேடிய சீதை' படத்தில் சேரனுக்கு ஜோடியாக நடித்தாலும், ஏனோ தமிழ்சினிமா அவரை கண்டுகொள்ளாமல் கழட்டிவிட, மலையாள திரையுலகம் தான் அவருக்கு அடைக்கலம் கொடுத்தது.

அதுகூட 2008 வரை தான், அதன்பின் கடந்த 7 வருடங்களாக தெலுங்கு, இந்தி, கன்னட படங்களில் மட்டுமே நடித்துவந்த விமலா ராமன் இப்போது மீண்டும் மலையாள சினிமாவில் பிரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லாலுக்கு ஜோடியாக 'ஒப்பம்' படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். 


Post your comment

Related News
ரஜினிகாந்த் அப்படி செய்தால் அவரை தாராளமாக பாராட்டலாம்- பிரபல அரசியல்வாதி
நீங்கள் உண்மையில் ஞானியா? இளையராஜாவை பார்த்து கேட்ட நடிகர்
இளையராஜா - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் பிரச்சினை சுமுகமாக தீர்க்கப்படும்: வெங்கையா நாயுடு
மக்கள் சூப்பர் ஸ்டார் விவகாரம்... 'என்னை மன்னிச்சிருங்க!' - மொட்ட சிவா கெட்ட சிவா இயக்குநர்
கபாலி முதல் சி-3 வரை போலியான வெற்றியை கொண்டாடும் தயாரிப்பாளர்கள் : திருப்பூர் சுப்பிரமணியம் ஆதங்கம்
மாநில அளவில் ரம்யா படைத்த சாதனை, அடுத்து இந்திய அளவில் சாதனை படைப்பாரா?
கமல்ஹாசன் கருத்து முட்டாள்தனமானது - சுப்பிரமணியன் சுவாமி ட்விட்!
தமிழ் பொறுக்கிகளே, தைரியமிருந்தால் முகவரியை பதிவிடுங்கள் : சுப்பிரமணியசுவாமி அடாவடி
கடவுள் அருள் பெற்றவர் எஸ்பிபி! - கேஜே ஜேசுதாஸ்
தனுஷ் அழைத்ததற்காக கதைகூட கேட்காமல் நடித்த பிரபல நடிகை!About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions