கார் விபத்தில் பலியான சினிமா நண்பனின் பெயரை மகளுக்கு சூட்டிய ஹாலிவுட் நடிகர் வின் டீசல்

Bookmark and Share

கார் விபத்தில் பலியான சினிமா நண்பனின் பெயரை மகளுக்கு சூட்டிய ஹாலிவுட் நடிகர் வின் டீசல்

’ப்ரைன் ஓ கார்னர்’ என்ற கதாபாத்திரத்தில், அசுர வேகத்தில் அசால்ட்டாக காரை ஓட்டிய ஸ்டைலிஷ் ஹீரோ ’பவுல் வாக்கர்’, ’பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்’ படம் பார்த்த ஒவ்வோரு ரசிகனின் மனதிலும் பச்சக்கென்று ஒட்டிக் கொண்டார்.

இந்த படத்தின் தொடர்ச்சியாக வந்த படங்களிலும் அதிவேகமாக காரை ஓட்டி ரசிகர்களை பரவசத்தின் எல்லைக்கே அழைத்துச் சென்ற பவுல் வாக்கர், 2013-ம் ஆண்டு நவம்பர் மாதம் நடந்த கார் விபத்தில் பலியாகி பல ரசிகர்களை ஆழ்ந்த சோகத்திலும் ஆழ்த்தினார்.

அவரது சக நடிகரும், உயிர் நண்பருமான ’வின் டீசல்’ பவுலின் மரணத்திற்கு பல மேடைகளில் அஞ்சலி செலுத்தி இருந்தாலும், விரைவில் திரைக்கு வர இருக்கும் ’பாஸ்ட் அண்ட் ப்யூரியஸ்’ திரைப்பட வரிசையின் 7 வது பாகமான ’ப்யூரியஸ் 7’ திரையிடல் விழாவில் தன் மகளுக்கு ’பவுலின்’ என்று பெயர் வைத்திருப்பதாக தெரிவித்து, தன் ஆருயிர் நண்பன் பவுலுக்கு தனது நினைவுகளால் அஞ்சலி செலுத்தினார்.

விழாவில் பேசிய அவர் “வேறு யாரையும் ஒரே கருவில் பிறந்தவர்களைப் போல் நான் நினைத்ததில்லை. ஆனால் பவுல்... அவன் ஒரு அற்புதமான ஆன்மா... அவனுடைய நினைவை சுமந்து கொண்டிருப்பது, என் நினைவின், என் வாழ்வின் ஒரு பகுதி.

திரைப்படத்தில் இருப்பது போன்றே உண்மையான வாழ்க்கையிலும் அவனுக்கும் எனக்குமான உறவு அன்பால் நிறைந்தது. ஒரு கொடூரமான கார் விபத்தினால், நான் என் சிறந்த நண்பனை, என் சகோதரனை இழந்து விட்டேன் “ என்று சொன்னபடி, உணர்ச்சிவசப்பட்டு மேடையில் ஸ்தம்பித்து நின்ற வின் டீசலை ரசிகர்கள் ஆசுவாசப்படுத்தினர்.

பொதுவாகவே தனது அந்தரங்க விஷயங்கள் பற்றி அதிகம் பகிர்ந்து கொள்ளாத வின் டீசல் கடந்த மார்ச் 16-ம் தேதி தனக்கும் தனது நீண்ட நாள் பெண் தோழி பலோமா ஜிமனேசுக்கும் பெண் குழந்தை பிறந்துள்ளதாக பேஸ்புக்கில் தெரிவித்தார். இவர்களுக்கு ரிலே மற்றும் வின்செண்ட் சின்க்ளேர் என்று இரண்டு மகள்கள் இருக்கின்றனர். 


Post your comment





Related News
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
பூஜையுடன் அடுத்த படத்தை துவங்கிய அரவிந்த்சாமி
சதுரங்க வேட்டை 2 - சம்பள பாக்கி கேட்டு நடிகர் அரவிந்த்சாமி வழக்கு
சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை
Inkem Inkem பாடல் புகழ் நாயகிக்கு தல, தளபதி இருவரில் யாரை பிடிக்கும் என்று தெரியுமா..?
நடிகர் நிவின் பாலி ஒரு உருக்கமான அறிக்கை
தல, தளபதியை விடுங்க, வினோத் பார்வை இந்த முன்னணி நடிகர் மீது தானாம்..!
ரசிகர்களை சிரிக்க வைக்கும் வகையில் உருவாகியிருக்கும் "அரசியல்ல இதெல்லாம் சாதாரணமப்பா"..!
தல அஜித்தின் அடுத்தப்படம் உறுதியானது, ரசிகர்கள் உற்சாகம்..!
வீரா நடிப்பில் வெளிவரவிருக்கும் "அரசியலில் இதெல்லாம் சாதாரணமப்பா"..!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions