மே 23 முதல் வினவயா ராமையா படப் பாடல்கள்

Bookmark and Share

மே 23 முதல் வினவயா ராமையா படப் பாடல்கள்

தெலுங்கு திரை உலகின் வளர்ந்து வரும் இளம் நாயகன் நகாவேஷ் நடிப்பில் உருவாகியுள்ள வினவாயா ராமையா படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதால் இப்படத்தின் பாடல்கள் மே 23 ஆம் தேதி வெளியிடப்படும் என படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இயக்குநர் ராம் பிரசாத் இயக்கியுள்ள இப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா, ஐதராபாத் மதபூரில் அமைந்துள்ள ஷில்பா கலா வேதிகாவில் நடைபெறவுள்ளது. இதில் பல டோலிவுட் பிரபலங்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

தெலுங்கில் திரைக்கு வந்த த்ரிஷ்யம் படத்தில் நடித்த கார்திகா இப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். நடிகர்கள் பிரமானந்தம்,அலி,சலபதி ராவ், ராம பிரபா போன்றோர் இப்படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

அனுப் ரூபென்ஸ் இசையமைத்துள்ள இப்படத்தை சிந்தூர புவ்வ கிருஷ்ணா ரெட்டி பெரும் பொருட்ச் செலவில் தயாரித்துள்ளார். விரைவில் இப்படத்தின் திரையிடும் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. 

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions