ரூ.17 லட்சம் கேட்டு படப்பிடிப்பை நிறுத்தியதாக நடிகர் வினய் மீது படஅதிபர் புகார்

Bookmark and Share

ரூ.17 லட்சம் கேட்டு படப்பிடிப்பை நிறுத்தியதாக நடிகர் வினய் மீது படஅதிபர் புகார்

‘உன்னாலே உன்னாலே’, ‘ஜெயம் கொண்டான்’, ‘அரண்மனை’ உள்ளிட்ட படங்களில் நாயகனாக நடித்தவர் வினய். இவர் தற்போது அனில்குமார் இயக்கும் ‘சேர்ந்து போலாமா’ படத்தில் நடிக்கிறார். இதில் நாயகியாக மதுரிமா நடிக்கிறார்.

இதன் படப்பிடிப்பு நியூசிலாந்தில் நடந்துள்ளது. நாளை மறுநாள் (6–ந் தேதி) ரிலீசாகிறது. இந்த நிலையில் ‘சேர்ந்து போலாமா’ படத்தின் தயாரிப்பாளர் சசி நம்பீசன் படப்பிடிப்பில் வினய் தொல்லை கொடுத்ததாக புகார் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:–

‘சேர்ந்து போலாமா’ படத்தின் முழு படப்பிடிப்பும் நியூசிலாந்தில் நடந்தது. இதற்காக வினய், மதுரிமா மற்றும் படக்குழுவினரை நியூசிலாந்து அழைத்து சென்றிருந்தேன். வினய்க்கு பேசியபடி சம்பளத்தின் ஒரு பகுதியை கொடுத்து விட்டேன். மீதி தொகையை படப்பிடிப்பு இறுதி நாளில் தருவதாக ஒப்பந்தம் போடப்பட்டது.

ஆனால் சில நாட்கள் படப்பிடிப்பு பாக்கி இருந்த நிலையில் வினய் திடீரென தனக்கு ரூ.17 லட்சம் வேண்டும் என்றார். எனது வங்கி கணக்கில் உடனடியாக இந்த பணத்தை போட்டால்தான் படப்பிடிப்புக்கு வருவேன் என பிளாக்மெயில் செய்தார். ஒன்றரை நாட்கள் படப்பிடிப்புக்கு வரவே இல்லை. இதனால் பெரிய நஷ்டம் ஏற்பட்டது.

தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவாவிடம் இதுபற்றி புகார் செய்தேன். அவர் தலையிட்டதன் பேரில் மீண்டும் நடித்தார். சிவா தலையிடாவிட்டால் இந்த படமே வந்து இருக்காது. வளரும் நடிகரான வினய் தயாரிப்பாளருக்கு இதுபோல் தொல்லை கொடுப்பது சரியல்ல.

நிறைய தயாரிப்பாளர்கள் தனக்கு பணம் தராமல் ஏமாற்றி விட்டதால்தான் முன்கூட்டி பணத்தை கேட்கிறேன் என்று சொல்லி அடம்பிடித்தார். நியூசிலாந்தில் அவருக்கு ‘பிஎம்டபிள்யூ’ கார் ஏற்பாடு செய்து கொடுத்தேன். அதில் தினமும் ஜாலியாக சுற்றினார். படத்தை விளம்பரபடுத்தும் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்க மறுத்து விட்டார்.

சிறு வயதில் ஒன்றாக இருந்த நண்பர்கள் பிறகு பிரிந்து விடுகின்றனர். 25 வயதில் அவர்கள் மீண்டும் சந்திக்கிறார்கள். ஒரு இடத்துக்கு ஒன்றாக பயணப்படுகின்றனர். அப்போது ஒரு கொலை நடக்கிறது. கொலையாளி யார் நண்பன் போன்ற கதையம்சத்தில் இப்படம் தயாராகியுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். 


Post your comment





Related News
புதுமையான ஒரு மேடை நிகழ்ச்சி ஒன்றிற்கான முயற்சியில் இசையமைப்பாளர் ரமேஷ் வினாயகம்
‘பகவதி’ வெங்கடேஷ் இயக்கும் நேத்ரா படத்தில் வினய்!
விஜய் இயக்குனருடன் இணைந்த வினய்!
விஜய்யை வைத்து வேதாளம் படத்தை புரோமோட் செய்த ’தல’ ரசிகர்கள்?
இந்திய ட்ரெண்டிங்கில் உலா வரும் அஜித் பாடல் ’வீர வினாயகா’
அஜித்தின் வீர வினாயகா பாடல் இன்று நள்ளிரவில் ரிலீஸ்
விவி விநாயக் இயக்கத்தில் மகேஷ் பாபு
அஜித்தின் அடுத்த சென்டிமென்ட்!
வினய் தேர்வு ஏன் : இயக்குநர் சரண் பதில்
சச்சின் மனசு.. மோகன்லாலுக்கு கிடையாது- டைரக்டர் அட்டாக்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions