
தெலுங்கு ராம் சரண் கதா நாயகனாக நடிக்கும் படம் "வினயை விதேயா ராமா" இப்படம் தமிழில் வெளியாகிறது. பிரிபல தெலுங்கு இயக்குனர் போயப்பட்டி சீனு இப்படத்தை இயக்கியுள்ளார். 'பரத் என்னும் நான்' என்ற படத்தில் நடித்து தெலுங்கு ரசிகர்களின் மனதை கவர்ந்த கியாரா அத்வானி கதாநாயகியாகவும் விவேக் ஓபராய் வில்லனாகவும் நடிக்கிறார்கள்.
மேலும் பிரசாந்த், சினேகா, மதுமிதா, முகேஷ் ரிஷி, ஜெபி, ஹரீஷ் உத்தமன், ஆர்யன் ராஜேஷ், ரவி வர்மன் என்று பெரிய நட்சத்திர வரிசை மற்ற முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.
குடும்ப பின்னணியில் காதல், கலகலப்பு, அரசியல், சென்டிமென்ட், வன்முறை, சாஹசம், என்று பொழுதுபோக்கு அம்சங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்த பிரம்மாண்ட படமாக "வினயை விதேயா ராமா" உருவாகியுள்ளது.
தேவிஸ்ரீ பிரசாத் இசை அமைக்க ரிஷி பஞ்சாபி, பண்டி ரமேஷ் ஆகியோர் ஒளிப்பதிவு மேற்கொண்டுள்ளனர். இப்படத்தின் பாடல் காட்சிகள் பிரம்மாண்ட அரங்குகளில் படமாக்கப்பட்டுள்ளது.
டி.வி.வி என்டர்டைன்மெண்ட்ஸ் தயாரித்து பிரகாஷ் பிலிம்ஸ் வழங்கும் ‘வினயை விதேயா ராமா’ பிப்ரவரி முதல் வாரம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வெளியாகிறது.
Post your comment