சச்சின் மனசு.. மோகன்லாலுக்கு கிடையாது- டைரக்டர் அட்டாக்

Bookmark and Share

சச்சின் மனசு.. மோகன்லாலுக்கு கிடையாது- டைரக்டர் அட்டாக்

காசி, என் மன வானில் படங்களை இயக்கியவர் வினயன். மலையாளத்தில் பல்வேறு படங்களை இயக்கி உள்ளார். இவருக்கும் மல்லுவுட் ஹீரோ மோகன் லாலுக்கும் எப்போதும் மோதல் போக்கு நிலவுகிறது.

இந்நிலையில் மோகன்லால் பற்றி தாக்கி தனது பேஸ்புக்கில் கருத்து தெரிவித்திருக்கிறார் வினயன். அவர் கூறியதாவது:கேரளாவில் நடக்க உள்ள தேசிய விளையாட்டு தொடக்க விழா நிகழ்ச்சியில் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.

இந்நிகழ்ச்சியில் மோகன்லாலின் லாலிசம் பேண்ட் இசைக் குழுவினர் ஷோ நடத்த அழைக்கப்பட்டுள்ளனர். இதற்காக ரூ.2 கோடி தரப்படுகிறது. லாலிசம் என்பது ஒரு விளம்பர நிறுவனம்.

இதில் மோகன்லாலின் 50 படங்களின் பாடல்கள் இடம்பெற்றுள்ளன. அதற்குபோய் ரூ.2 கோடி தருவது மிகவும் அதிகம். இவ்வளவு பெரிய தொகையை பெற்றுக்கொண்ட பிறகுதான் மோகன்லால் இந்நிகழ்ச்சியில் பங்கேற்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.

அதேசமயம் சச்சின் டெண்டுல்கர் எந்த தொகையும் வாங்காமல் பங்கேற்கிறார். சச்சின் மனசு, மோகன்லாலுக்கு கிடையாது.இவ்வாறு வினயன் கூறியிருக்கிறார். இயக்குனரின் இந்த கருத்துக்கு பலர் தங்களது விருப்பு வெறுப்புகளை தெரி விக்கும் விதமாக இணைய தளத்தில் கமென்ட் போட்டிருக்கின்றனர். 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions