குழந்தை நட்சத்திர ஜோடி நடிக்கும் விந்தை

Bookmark and Share

குழந்தை நட்சத்திர ஜோடி நடிக்கும் விந்தை

ரஜினிகாந்த், விஜயகாந்த், நடித்த படங்களில் அவர்களின் குழந்தை நட்சத்திர கேரக்டரில் நடித்தவர் மாஸ்டர் மகேந்திரன். தற்போது ஹீரோவாக நடித்துக் கொண்டிருக்கிறார். கம்பீரம் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பல படங்களில் நடித்தவர் மனீஷாஜித்.

தற்போது இவர்கள் இருவரும் ஹீரோ ஹீரோயின்களாக விந்தை என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். வர்மம் படத்தை இயக்கிய லாரா இயக்குகிறார். எம்.எஸ்.பாஸ்கர், மகாநதி சங்கர், காதல் சரவணன், முத்துக்காளை, உள்பட பலர் நடிக்கிறார்கள். ரத்தீஷ் கண்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.

வில்லியம்ஸ் இசை அமைக்கிறார். வர்மம் படத்தை சீரியசான படமாக இயக்கினேன். விந்தை படத்தை சிரிப்பு படமாக இயக்குகிறேன். இரண்டு மணி நேரம் சிரிக்க வைக்க வேண்டும் என்கிற ஒரே நோக்கம்தான்.

குழந்தை நட்சத்திரங்களான மகேந்திரனும், மனீஷாவும் ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்க துவங்கியிருந்தாலும் சரியான பிரேக் அவர்களுக்கு கிடைக்கவில்லை. இந்தப் படம் அதனை கொடுக்கும். என்கிறார் இயக்குனர் லாரா.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions