கண்ணீருடன் விடை பெற்ற விந்தியா..! நிறுத்திய முதல்வர்..!

Bookmark and Share

கண்ணீருடன் விடை பெற்ற விந்தியா..! நிறுத்திய முதல்வர்..!

அம்மா ஜெ., மறைவிற்கு பிறகு முதலில் வெளியேறியது நடிகர் ஆனந்தராஜ். எனக்கு அம்மா மட்டுமே..சின்னம்மா இல்லை என்றார். அடுத்து மிகவும் மனம் உடைந்த நிலையில் இருந்த அம்மாவின் விசுவாசியும் ஜெ.,வின் செல்லப்பிள்ளையாக இருந்தவருமான நடிகை விந்தியா “எனக்கு அம்மா மட்டுமே முக்கியம் அம்மா இல்லாத அரசியல் எனக்கு தேவை இல்லை” என்று கூறி கண்ணீருடன் அரசியலை விட்டு விலகினார்.

அம்மாவின் வாழ்க்கை வரலாறு புத்தகத்தை எழுதும் முயற்சியில் ஈடுபட்டார். இந்த விஷயம் முதல்வருக்கு போனது. அதிர்ச்சி அடைந்தார் என்கிறார்கள்.காரணம் அம்மாவிற்கு அடுத்தபடியாக கூட்டத்தை கூட்டும் வலிமை நடிகை விந்தியாவிற்கு உண்டு.

எதையும் எழுதி வைக்காமல் மேடைகளில் வெளுத்து வாங்குவார். பலமுறை விந்தியாவை கார்டனுக்கு அழைத்து ஜெ.,அம்மா பாராட்டுவார்.

இதையெல்லாம் உணர்ந்த முதல்வர்..விந்தியாவை தொடர்பு கொண்டு “அம்மா இல்லை என்றால் என்ன..? அப்பாவாக நான் இருகிறேன் அவசரப் படாதே நீ யாரையும் சின்னம்மா என்று கூப்பிடும் நிலை வராது ” என்று கூறினாராம் நெகிழ்ந்து போனார் விந்தியா. பொதுக் குழுவிற்கு பின் அரசியல் களம் மாறும் அதுவரை காத்திருக்கலாம் என்கிற முடிவிற்கு வந்துள்ளார் விந்தியா.


Post your comment











About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions