ஐந்து ஆண்டுகளைக் கடந்த விடிவி

Bookmark and Share

ஐந்து ஆண்டுகளைக் கடந்த விடிவி

தமிழ்த் திரையுலகில் சில படங்கள்தான் எவர் கிரீன் படங்களாக மனதில் பசுமையாக இடம் பெற்று விடும். அப்படி ஒரு படமாக 2010ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 26ம் தேதி வெளிவந்த படம்தான் விண்ணைத் தாண்டி வருவாயா.

கௌதம் மேனன் இயக்கத்தில் ஏ.ஆர்.ரகுமான் இசையமைப்பில் சிம்பு, த்ரிஷா, கணேஷ், இன்று தெலுங்கில் முன்னணியில் இருக்கம் நாக சைதன்யா, சமந்தா ஆகியோர் நடித்து வெளிவந்த படம்.

இந்தக் கால இளைஞர்களை வெகுவாகக் கவர்ந்த ஒரு படம். கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்படி ஒரு காதல் படம் வெளிவரவேயில்லை என்று பல இளம் ரசிகர்கள் கண்டிப்பாகச் சொல்வார்கள்.

கௌதம் மேனனின் காதல் டச்சும், ரகுமானின் இனிமையான பாடல்களும், சிம்புவா இது என ஆச்சரியப்பட வைத்த அமைதியான நடிப்பும், புடவையிலேயே அதிகமாக வந்தாலும் அழகாக வலம் வந்த த்ரிஷாவும் என இன்றும் அந்தப் படத்தின் காட்சிகள் பலரின் மனதில் நிழலாடிக் கொண்டிருக்கின்றன.

அப்போதே சுமார் 25 கோடிக்கும் மேல் படம் வசூலித்து மிகப் பெரிய சாதனை புரிந்தது. தெலுங்கில் நாக சைதன்யா, சமந்தா நடிக்க அதே தினத்தில் வெளியாகி அங்கும் வெற்றிப் படமாக அமைந்தது. அந்தப் படத்திற்குப் பிறகு சிம்புவிற்கு இன்னும் பெரிய அளவில் வெற்றி கிடைக்கவில்லை.

இன்றைய ரசிகர்களும் படத்தின் இரண்டாம் பாகம் வரும் என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஐந்து வருடங்கள் கழித்து மீண்டும் சிம்புவும், கௌதம் மேனனும் இணைந்த படம் ஆரம்பிக்கப்பட்டு, பின்னர் நிறுத்தப்பட்டு, தற்போது மீண்டும் அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ளது.

மீண்டும் அந்த ஒரு மாயத்தை அடுத்து அவர்கள் கூட்டணியில் வரப்போகும் படம் ஏற்படுத்துமா என்றுதான் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறார்கள்.


Post your comment





Related News
அடேங்கப்பா.. ரங்கம்மா பாட்டி பேத்தியா இந்த நடிகை? - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!
விண்ணைத் தாண்டி வருவாயா படத்தில் நடிக்க மறுத்த தனுஷ்!
மீண்டும் ரிலீஸாகும் விண்ணைத் தாண்டி வருவாயா!
‘விண்ணைத் தாண்டி வருவாயா’ டீமின் ‘அச்சம் என்பது மடமையடா’!
மீண்டும் சேலையில் தோன்றும் த்ரிஷா
சிம்பு, த்ரிஷாவின் வாழ்வில் மறக்க முடியாத ஓர் முக்கிய நாள்..!
நடிகருடன் குடித்தனம் : எமி ஜாக்ஸன் விளக்கம்
விண்னைத்தான்டி வருயாபடத்தின் ஹிந்தி டீசர்
விண்ணைத் தாண்டி வருவாயா’ ஹிந்தியில் சிம்பு?
மீண்டும் சேர்கிறது விண்ணைத் தாண்டி வருவாயா கூட்டணி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions