‘விண்ணைத் தாண்டி வருவாயா’ டீமின் ‘அச்சம் என்பது மடமையடா’!

Bookmark and Share

‘விண்ணைத் தாண்டி வருவாயா’ டீமின் ‘அச்சம் என்பது மடமையடா’!

கௌதம் மேனன் இயக்கத்தில் அஜித் நடித்து சமீபத்தில் வெளிவந்த ‘என்னை அறிந்தால்’ படம் பாக்ஸ் ஆபீசில் எல்லா சாதனைகளையும் முறியடித்து வருகிறது. இந்நிலையில், கவுதம் மேனன் தனது அடுத்த படத்திற்கான வேலைகளில் களமிறங்க தொடங்கியுள்ளார்.

இவர், ‘என்னை அறிந்தால்’ படத்தை தொடங்குவதற்கு முன்பாக சிம்புவை வைத்து புதிய படம் ஒன்றை தொடங்கினார். இப்படத்தின் படப்பிடிப்புகள் 50 சதவீதம் நடைபெற்றுக் கொண்டிருந்தபோது, அஜித் படத்தின் பணிகளை தொடங்கிவிட்டார்.

இப்போது, ‘என்னை அறிந்தால்’ வெளியானதைத் தொடர்ந்து சிம்பு படத்தை இயக்க தயாராகிவிட்டார். விண்ணை தாண்டி வருவாயா படத்தின் மகத்தான வெற்றிக்கு பிறகு சிம்பு, ஏ.ஆர்.ரகுமான், கௌதம் மேனன் இணையும் இந்த படத்தின் மேல் ரசிகர்களின் எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது.

இப்படத்திற்கு ‘சற்றென்று மாறுது வானிலை’ என்று தலைப்பு வைத்துள்ளதாக செய்திகள் வெளியானது. ஆனால் தற்போது கௌதம் மேனன் இந்தப் படத்தின் தலைப்பை அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.

'அச்சம் என்பது மடமையடா' என பெயரிடப் பட்டு உள்ள இந்த தலைப்பே படத்தின் கதைக்கேற்ப தலைப்பு என அவர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே மூன்று பாடல்கள் பதிவாகி உள்ள நிலையில், 'அச்சம் என்பது மடமையடா' படத்தின் படப்பிடிப்பு இந்த வாரத்தில் துவங்க உள்ளது. 


Post your comment





Related News
எனக்கு காதலா? நடிகை மஞ்சிமா மோகன் கூறிய பதிலால் ரசிகர்கள் ஷாக்
அடேங்கப்பா.. ரங்கம்மா பாட்டி பேத்தியா இந்த நடிகை? - வைரலாகும் புகைப்படம் உள்ளே.!
சிம்பு ரசிகர்களுக்கு AAA மட்டுமில்லை, மற்றொரு ட்ரீட்டும் காத்திருக்கிறது!
முதல் வருட கொண்டாட்டத்தில் தள்ளிபோகாதே! ரசிகர்கள் மகிழ்ச்சி
இந்த ஆண்டின் பெஸ்ட் ஆல்பம் எது தெரியுமா?
கொடியின் வசூலை ஒரே வாரத்தில் தாண்டிய AYM!
அச்சம் என்பது மடமையடா படத்துக்கு வந்த புது சிக்கல்!
சிம்பு படத்திற்கு யு சான்றிதழ்
அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் தேதி முடிவானது!
அச்சம் என்பது மடமையடா ரிலீஸ் எப்போது?








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions