சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை

Bookmark and Share

சினிமாவில் ரீ-என்ட்ரி கொடுக்கும் பிரபல நடிகை

நடிகை வினோதினி. ‘வண்ண வண்ண பூக்கள்’ உள்ளிட்ட பல படங்கள் மற்றும் சீரியல்கள் மூலம் புகழ்பெற்றவர். அவர் அளித்த பேட்டியில் இருந்து...
சினிமாவிலிருந்து நீண்ட காலம் விலகியிருக்க என்ன காரணம்?”

“கல்யாணமாகி குழந்தைப் பிறந்ததும், பொறுப்பான அம்மாவா இருக்கிறதுதான் முக்கியம்னு நினைச்சேன். அதனால்தான் நடிக்க வேண்டாம்னு முடிவுபண்ணினேன்.

நடிச்சே ஆகணும் என்கிற சூழ்நிலை எனக்கு எப்போதும் ஏற்பட்டதில்லை. என்னைத் தேடிவந்த வாய்ப்புகளைச் சரியா பயன்படுத்தி குறிப்பிட்ட காலம் நடிச்சேன்.

கல்யாணத்துக்குப் பிறகு சினிமாவிலிருந்து விலகியிருந்தேன். இப்போதான் மறுபடியும் நடிக்க முடிவெடுத்திருக்கேன். அடுத்த வரு‌ஷத்திலிருந்து நடிக்க முடிவு செய்திருக்கேன்.

உங்க சினிமா என்ட்ரி எப்படி நடந்துச்சு?”

“என் அம்மா, டிராமா ஆர்டிஸ்ட். அதனால், சினிமா துறையினர் பலருக்கும் என்னைப் பற்றி தெரியும். நாலரை வயசுல குழந்தை நட்சத்திரமா ஆரம்பிச்சது. ‘மணல் கயிறு’, ‘புதிய சகாப்தம்‘ உள்ளிட்ட பல படங்களில் நடிச்சேன். சில வருட இடைவெளிக்குப் பிறகு, ‘ஆத்தா உன் கோயிலிலே’ படம் மூலம் ரீஎன்ட்ரி கொடுத்தேன்.

பாலுமகேந்திரா சாரின், ‘வண்ண வண்ண பூக்கள்’ படத்தில் ஹீரோயினா நடிச்சது நல்ல அடையாளத்தைக் கொடுத்துச்சு. தொடர்ந்து, கன்னடத்தில் பிஸியாகிட்டேன். ‘உனக்காக எல்லாம் உனக்காக’ உள்பட சில படங்களில் கேரக்டர் ரோல் பண்ணியிருக்கேன்.”

எனக்கு நல்லா சாப்பிடப் பிடிக்கும். அதனால், மத்தவங்களை தொந்தரவு செய்யாமல் நானே செய்துக்க நினைச்சேன். அப்போ சோஷியல் மீடியா கிடையாது. அதனால், சமையல் புக், தெரிஞ்சவங்க சொல்ற டிப்ஸ் எனத் தேடி தேடி கத்துப்பேன். சீரியல்களில் நடிச்சுட்டிருந்தப்போ, ஷூட்டிங் ஸ்பாட்ல சக ஆர்டிஸ்டுகளோடு சேர்ந்து சமைப்பேன்.

ரொம்ப சந்தோ‌ஷமா இருக்கும். இப்போ, என் குழந்தைகள் மற்றும் கணவருக்குப் பிடிச்ச உணவுகளை சமைச்சு கொடுக்கிறேன். அவங்க ரசிச்சு சாப்பிடுறதைப் பார்த்து சந்தோ‌ஷப்படறேன்.


Post your comment

Related News
தமிழகத்திற்கும் இந்தியாவிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் - விஜய்யை வாழ்த்திய விஜயகாந்த்
பேட்ட படத்தில் மிசா கைதியாக ரஜினி - வைரலாகும் புகைப்படம்
இயக்குனர் மீது ஸ்ரீரெட்டி பாலியல் புகார்
சர்கார் படத்தை தொடர்ந்து ரஜினிகாந்துடன் இணையும் ஏ.ஆர்.முருகதாஸ்
அழகுக்காக அப்படி செய்யத் தேவையில்லை - பிரியா பவானி சங்கர்
சதுரங்க வேட்டை 2 சம்பள பாக்கி - அரவிந்த்சாமி, மனோபாலாவுக்கு ஐகோர்ட்டு உத்தரவு
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
செக்கச்சிவந்த வானம் படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
ரசிகையாக உணர்ந்த தருணம் - அஜித்தை பார்த்த மகிழ்ச்சியில் சாக்‌ஷி அகர்வால்
மீண்டும் திலீப்புக்கு எதிராக நடிகைகள் போர்க்கொடி
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions