மகேந்திரனுக்கு விந்தை படம் கொடுத்த தேக்கம்!

Bookmark and Share

மகேந்திரனுக்கு விந்தை படம் கொடுத்த தேக்கம்!

குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தவர் மகேந்திரன். இவர் கடந்த சில ஆண்டுகளாகவே ஹீரோ அவதாரம் எடுத்திருக்கிறார். அப்படி அவர் சில படங்களில் நடித்திருக்கும் நிலையில், விழா படம் வித்தியாசமான கதையில் உருவானது.

அதனால் அந்த படம் மகேந்திரனின் ஹீரோ பயணத்துக்கு திருப்பத்தை கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த படம் கமர்சியல் ரீதியாக தோல்வியடைந்தது.

அதனால் அதன்பிறகு விந்தை படத்தில் தவறவிட்ட வெற்றியை எட்டிப்பிடித்து விடவேண்டும் என்று முயற்சி எடுத்தார். ஆனால் அந்த படம் வந்தவேகத்திலேயே தியேட்டரை விட்டு ஓட்டம் பிடித்தது. விளைவு, அந்த படத்திற்கு பிறகு மகேந்திரன் நடித்து வந்த போரிடப்பழகு என்ற படம் தற்போது தேங்கிக்கிடக்கிறது.

இந்த படத்தில் மகேந்திரனுடன் சமுத்திரகனி, உள்பட பல முன்னணி நடிகர்கள் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளனர். விந்தை படம் அதிர்ச்சி தோல்வி அடைந்ததால் போரிடப்பழகு படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறாமல் உள்ளதாம்.

அதேசமயம், தற்போது அப்படம் தடுமாறினாலும், போரிடப்பழகு என்ற டைட்டீலை மாற்றி அடுத்தகட்ட படப்பிடிப்பை நடத்த இருக்கிறார்கள் என்றும் அந்த யூனிட்டில் இருப்பவர்கள் கூறுகிறார்கள்.


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions