பெங்களூரில் விஐபி ஷூட்டிங்கில் பங்கேற்ற துணை நடிகை மர்ம மரணம்

Bookmark and Share

பெங்களூரில் விஐபி ஷூட்டிங்கில் பங்கேற்ற துணை நடிகை மர்ம மரணம்

பெங்களூரில் படப்பிடிப்பு நடந்து வந்த இடத்திற்கு அருகே கட்டுமானப்பணி நடக்கும் இடத்தில் கன்னட துணை நடிகை பத்மா மர்மமான முறையில் இறந்து கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

பிரபல கன்னட நடிகர் வி. ரவிச்சந்திரனின் மகன் மனோரஞ்சன் நடித்து வரும் படம் விஐபி. ராக்லைன் வெங்கடேஷ் தயாரிக்கும் இந்த படத்தை நந்தகிஷோர் இயக்கி வருகிறார்.

படத்தின் பாடல் காட்சி பெங்களூர் ஏலஹன்கா அருகே உள்ள அவலஹள்ளியில் திங்கட்கிழமை படமாக்கப்பட்டது. அன்றைய படப்பிடிப்பில் 160 பேர் கலந்து கொண்டனர். படப்பிடிப்பு முடிந்து மாலை அனைவரும் வீட்டிற்கு கிளம்பும்போது துணை நடிகை பத்மாவதி(44) மாயமானது தெரிய வந்தது.

உடனே படக்குழுவினர் அவரை தேடினர். படப்பிடிப்பு நடந்த இடத்திற்கு அருகே கட்டுமானத்தில் இருந்த கட்டடத்தின் லிப்ட் உள்ள பகுதியில் நடிகை பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ஜக்கூரை சேர்ந்த பத்மாவதி கடந்த 20 ஆண்டுகளாக படங்களில் நடித்து வந்தார்.


Post your comment





Related News
விஜய் படத்தை போலவே நடந்த உண்மை சம்பவம்
விஜபி 2 படத்தில் இருந்து கிளம்பிய பாலிவுட் நாயகி கஜோல்
தனுஷின் விஐபி2 ரிலீஸ் தேதி
தென்னிந்தியாவிலேயே தனுஷ் படைத்த பிரமாண்ட சாதனை
10 வருடம் பின் நோக்கி செல்லப்போகிறேன், தனுஷ் சந்தோஷம்
இஷ்டத்துக்கும் டிக்கெட் விற்பனை... சீட் இல்லை.. லோலோவென அலைய வைக்கும் சென்னை திரைப்பட விழா!
வேலையில்லா பட்டதாரி பார்ட்-2வின் இணைந்த மற்றொரு முன்னணி நடிகை
விஐபி 2: தனுஷோடு வில்லி கஜோலே வருகிறாரே, ஹீரோயின் அமலா பால் எங்கய்யா?
விஐபி 2 வில் கஜோலின் கதாபாத்திரம் பற்றிய ரகசியம் லீக்கானது
தனுஷிடம் ரசிகர்கள் கேட்கும் அடுத்தடுத்து லாஜிக் கேள்விகள், பதில் அளிப்பாரா?







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions