விஐபி 2 - சமந்தாவின் படப்பிடிப்பு நிறைவு

Bookmark and Share

விஐபி 2 - சமந்தாவின் படப்பிடிப்பு நிறைவு

'வேலையில்லா பட்டதாரி' வெற்றிப் படத்தைத் தொடர்ந்து அந்தப் படத்தின் இரண்டாம் பாகத்தை தனுஷ் - இயக்குனர் வேல்ராஜ் கூட்டணி படமாக்கி வருகிறது.

கடந்த சில வாரங்களுக்கு முன் ஆரம்பமான இப்படத்தின் படப்பிடிப்பு முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. இந்தப் படத்தின் இரண்டு கதாநாயகிகளுள் ஒருவராக நடிக்கும் சமந்தா சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது.

கடந்த ஒரு சில வாரங்களாக சமந்தா தொடர்ச்சியாக இந்தப் படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டார். இந்தப் படத்தில் தனுஷ், சமந்தா, எமி ஜாக்சன், கே.எஸ்.ரவிக்குமார், ராதிகா மற்றும் பலர் நடிக்கிறார்கள். வழக்கம் போல அனிருத் இசையமைக்கிறார்.

முதல் படத்தைப் போலவே இந்தப் படத்தையும் குடும்பப் பாங்கான படமாகத்தான் எடுத்து வருகிறார்கள் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இனி, எமி ஜாக்சன் சம்பந்தப்பட்ட காட்சிகளை படமாக்க உள்ளதாகத் தெரிகிறது.

தனுஷ் நடிப்பில் அடுத்து 'மாரி' படம் வெளி வர உள்ளது. இந்தப் படத்தையடுத்து 'விஐபி 2' வெளிவரும். இப்படத்திற்கு இதுவரை இன்னும் பெயர் வைக்கவில்லை. 'வேலையில்லா பட்டதாரி 2' என்றே வைப்பார்களா அல்லது வேறு பெயரை வைப்பார்களா என்பது இனிமேல்தான் தெரியும்.


Post your comment





Related News
தனுஷின் விஐபி-யில் நடந்த மோசடி, சும்மா விடுவாரா தனுஷ்
இலங்கையின் தேசிய விருதை வென்ற 'ஓவியா' பட பாடல்!
தனுஷின் விஜபி 2 பட இசை மற்றும் டிரைலர் ரிலீஸ் தேதி இதோ
தனுஷ் படத்தில் நடித்துவரும் நாயகிக்கு மத்திய அரசால் ஏற்பட்ட பிரச்சனை
வேலையில்லா பட்டதாரி-2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு
விஜய் படத்தை போலவே நடந்த உண்மை சம்பவம்
விஜபி 2 படத்தில் இருந்து கிளம்பிய பாலிவுட் நாயகி கஜோல்
தனுஷின் விஐபி2 ரிலீஸ் தேதி
தென்னிந்தியாவிலேயே தனுஷ் படைத்த பிரமாண்ட சாதனை
10 வருடம் பின் நோக்கி செல்லப்போகிறேன், தனுஷ் சந்தோஷம்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions