வைரமுத்து மீதான வழக்கை ஐகோர்ட்டுதான் முடிவு செய்யவேண்டும்: அட்வகேட் வாதம்

Bookmark and Share

வைரமுத்து மீதான வழக்கை ஐகோர்ட்டுதான் முடிவு செய்யவேண்டும்: அட்வகேட் வாதம்

சென்னை தி.நகரில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஓய்வுப்பெற்ற சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி கைலாசம் நினைவு தபால் தலை வெளியிடும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியில் ஐகோர்ட்டு தலைமை நீதிபதி சஞ்சய்கிஷன் கவுல், நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உட்பட பலர் கலந்துக் கொண்டனர். 

இந்த நிகழ்ச்சியில் பேசிய வைரமுத்து, நீதிபதிகள் வாழ்நாள் முழுவதும் நேர்மையாக இருந்து விட்டு, ஓய்வுப்பெறுவதற்கு 6 மாதங்களுக்கு முன்பு குற்றச்சாட்டுக்கு ஆளாகி விடுகின்றனர் என்று பேசினார். 

இதையடுத்து, வைரமுத்து மீது கோர்ட்டு அவமதிப்பு வழக்குப்பதிவு செய்யவேண்டும் என்ற ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு சென்னை ஐகோர்ட்டு நீதிபதிகள் ஆர்.சுதாகர், பி.என்.பிரகாஷ் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, கோர்ட்டு அவமதிப்பு வழக்கு குறித்து அட்வகேட் ஜெனரலின் கருத்து கேட்கப்பட்டது. அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி ஆஜராகி, ‘இந்த கோர்ட்டு அவமதிப்பு வழக்கை ஐகோர்ட்டே தாமாக முன்வந்து பதிவு செய்துள்ளது. எனவே, இதில் ஐகோர்ட்டுதான் முடிவு செய்யவேண்டும்’ எ ன்று கூறினார்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions