அனுஷ்காவுடன் கோலி புத்தாண்டு கொண்டாடுகிறார்

Bookmark and Share

அனுஷ்காவுடன் கோலி புத்தாண்டு கொண்டாடுகிறார்

உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக திகழ்பவர் வீராட்கோலி. டெஸ்ட் கேப்டனான அவர் கிரிக்கெட்டின் 3 நிலைகளிலும் ஜொலித்து வருகிறார்.இந்த ஆண்டு வீராட்கோலி ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். டெஸ்ட், ஒருநாள் போட்டி மற்றும் 20 ஓவர் போட்டிகளில் அவர் இந்த ஆண்டில் அதிக ரன் எடுத்த இந்திய வீரராக ஜொலித்தார்.

வீராட்கோலி நடிகை அனுஷ்கா சர்மாவை காதலித்து வருகிறார். இருவரும் தற்போது உத்தரகாண்டில் உள்ளனர். நேற்று அவர்கள் கிறிஸ்துமஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.புத்தாண்டு வரை அவர் அனுஷ்கா சர்மாவுடன் உத்தரகாண்டில் இருப்பார்.

அங்கு தான் அவர் காதலியுடன் புத்தாண்டை கொண்டாடுகிறார்.

காதலியுடன் நன்றாக பொழுதை போக்கிய பிறகே அவர் இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவார். பெங்களூரில் 5-ந்தேதி தொடங்கும் வீரர்களின் பயிற்சி முகாமில் கலந்து கொள்வார்.

வீராட்கோலியின் வருகைக்கு உத்தரகாண்ட் மாநில முதல்-மந்திரி ஹர்ஷ் ராவத் வாழ்த்து தெரிவித்துள்ளார். கோலி உத்தரகாண்ட் மாநில சுற்றுலா தூதுவராக கடந்த ஏப்ரல் மாதம் அறிவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
படத்தை பற்றிய தனுஷின் முக்கிய டுவிட்- உற்சாகத்தில் ரசிகர்கள்
தனுஷ் எங்கள் மகன் என்று தம்பதி போட்ட வழக்கு- அதிரடி உத்தரவை பிறப்பித்த உயர்நீதிமன்றம்
பாவனா வழக்கில் கைதான முக்கிய குற்றவாளி- பிரபலங்களின் கருத்து
பாவனா கடத்தல் புகாரில் கைதானவரின் அதிர்ச்சி வாக்குமூலம்
கடைசியில் காசுக்காக ’அந்த’ வரிசையில் தமன்னாவும் சேர்ந்துட்டாரே...?
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு எழில்மிகு மணிமண்டபம்
தனது திருமணத்தை விரைவில் நடத்த சமந்தா வற்புறுத்தல்
ஸ்பெஷல் நாள் என்று தெரியாமலேயே நேற்று சந்தனதேவன் படத்தைத் தொடங்கிய அமீர்!
தனுஷ் மீது புகார் எழுப்பிய சுசித்ரா- விளக்கம் கொடுத்த அவரது கணவர்
முருகதாஸ் படத்தை பற்றிய அறிவிப்பு வெளிவந்தது, ரசிகர்கள் கொண்டாட்டம்







About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2017. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions