இலங்கை கடற்கரையில் அனுஷ்காஷர்மா - கோலி: கும்மாளம்..!

Bookmark and Share

இலங்கை கடற்கரையில் அனுஷ்காஷர்மா - கோலி: கும்மாளம்..!

வீராட் கோலியும், அனுஷ்கா ஷர்மாவும் இலங்கை கடற்கரையில் காதல் விளையாட்டில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய கிரிக்கெட் வீரர் வீராட் கோலி இந்தி நடிகை அனுஷ்கா ஷர்மாவை காதலித்து வருவது அனைவரும் அறிந்த ஒன்றாகும்.

இருவரும் பல்வேறு இடங்களில் ஒன்றாக சுற்றி திரிந்து வருகின்றனர். இந்திய அணி நியூசிலாந்தில் சமீபத்தில் விளையாடிய போது வீராட் கோலியை பார்ப்பதற்காக அனுஷ்கா ஷர்மா நியூசிலாந்து சென்றார். அங்கு இருவரும் ஒன்றாக சுற்றினர்.

இந்த நிலையில் வீராட் கோலியும், அனுஷ்கா ஷர்மாவும் இலங்கை கடற்கரையில் காதல் விளையாட்டில் ஈடுபட்ட தகவல் வெளியாகி உள்ளது. அனுஷ்கா ஷர்மா சூட்டிங்குக்காக இலங்கை சென்று இருந்தார். ஆசிய கோப்பை போட்டியில் விளையாடி விட்டு நாடு திரும்பியவுடன் கோலி காதலியை பார்ப்பதற்காக இலங்கை சென்றார்.

சூட்டிங் இல்லாத சமயத்தில் இருவரும் அங்குள்ள கடற்கரையில் ஒன்றாக இணைந்து சுற்றி திரிந்தனர். கடந்த சில தினங்களாக காதலியுடன் ஜாலியாக இருந்து விட்டு கோலி நேற்று முன்தினம்தான் மும்பை திரும்பினார், 20 ஓவர் உலக கோப்பை போட்டிக்கான இந்திய அணி நேற்று வங்காளதேசம் புறப்பட்டது. இதற்காக அவர் அணியுடன் இணைந்து கொண்டார்.

ஆசிய கோப்பை போட்டியில் டோனி இல்லாததால் வீராட்கோலி கேப்டனாக பணியாற்றினார். இறுதிப் போட்டிக்கு கூட இந்தியா தகுதி பெறவில்லை. தோல்வி பற்றி எந்த கவலையும் இல்லாமல் அவர் ஆசிய கோப்பைக்கு பிறகு அனுஷ்கா ஷர்மாவுடன் இலங்கை கடற்கரையில் கும்மாளம் போட்டது மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.


Post your comment





Related News
காய்கறி விற்கும் தோற்றத்தில் சிம்பு பட நடிகை - வைரலாகும் புகைப்படம்
விளம்பர வேலைக்காக 40 நாட்களை ஒதுக்கிய வருண் தவான் மற்றும் அனுஷ்கா ஷர்மா..!
சார்லி சாப்ளின் 2 படத்திற்காக செந்தில் கணேஷ் - ராஜலஷ்மி பாடிய முதல் பாட்டு
ஓரினசேர்க்கைக்காக பிரபல நடிகை கூறிய தகவலால் வந்த சர்ச்சை! யார் அந்த நடிகர்கள்
முதல் படத்தில் நடித்ததுமே இப்படி ஒரு ஹாட் லுக்கா! இளம் நடிகையின் புகைப்படம்
இப்படியா கவர்ச்சியை காட்டுவாங்க? நடிகையால் ஷாக்கான ரசிகர்கள்!
ஆஹா.. என்னவொரு காதல் ஜோடி, டிடி-யை அசர வைத்த முன்னணி பிரபலம்.!
அடேங்கப்பா சூர்யா, ஜோதிகா மகளா இது - வியக்க வைக்கும் அழகிய புகைப்படம் உள்ளே.!
படு கவர்ச்சியால் ரசிகர்களிடம் அசிங்கப்பட்ட பிரபல முன்னணி நடிகை - வைரலாகும் புகைப்படம்.!
விராட் கோலி, அனுஷ்கா ஷர்மாவின் திருமண தேதி இதோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions