வெனிஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற விசாரணை!

Bookmark and Share

வெனிஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற விசாரணை!

வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள புதிய படம் ‘விசாரணை’. இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ், சமுத்திரகனி, ஆனந்தி, சரவண சுப்பையா, கிஷோர், முருகதாஸ், முத்துக்குமார், சந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். 

இப்படம் சமீபத்தில் நடைபெற்ற 72-வது வெனிஸ் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு இந்த விழாவில், அம்னஸ்டி இன்டர்நேஷனல் இத்தாலி ‘மனித உரிமைகள் பற்றிய சினிமா’ என்ற பிரிவில் ‘விசாரணை’ படம் விருது வென்றுள்ளது. இந்திய திரைப்பட வரலாற்றிலேயே வெனிஸ் திரைப்பட விழாவில் விருது வென்ற முதல் இந்திய திரைப்படம் ‘விசாரணை’ என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். தனுஷின் வுண்டர்பார் பிரைவேட் லிமிடெட் மற்றும் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி இணைந்து தயாரித்துள்ளது. லைக்கா நிறுவனம் இப்படத்தை உலகமெங்கும் வருகிற செப்டம்பர் 24-ந் தேதி வெளியிடுகிறது.


Post your comment





Related News
மேடையிலே மண்டியிட்டு நன்றி தெரிவித்த விசாரணை படவில்லன் - புகைப்படம் விள்ளே
மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்ற தனுஷ்!
ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட விசாரணை!
விசாரணை படத்துக்கு கிடைத்த மற்றொரு மரியாதை!
விசாரணை படத்துக்கு 3 தேசிய விருது
பல மொழிகளில் ரீமேக் ஆகும் விசாரணை!
இந்தியில் ரீமேக் ஆகிறது விசாரணை
பாகுபலியில் விசாரணை பட வில்லன்
விசாரணை மாதிரி ஒரு படத்தை பார்த்ததில்லை – டிவிட்டரில் புகழும் ரஜினி
நாளை முதல் திரையை அதிரவைக்க வரும் விசாரணை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions