தமிழக ஆட்டோ டிரைவர் கதைக்கு கிடைத்த உலக அங்கீகாரம்!

Bookmark and Share

தமிழக ஆட்டோ டிரைவர் கதைக்கு கிடைத்த உலக அங்கீகாரம்!

வெனிஸ் திரைப்பட விழாவில் தமிழில் உருவான விசாரணை படத்துக்கு மனித உரிமைகளை வலியுறுத்தும் படத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் மூலக் கதையை எழுதியவர் கோவையைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் சந்திரகுமார்.

வெற்றி மாறன் இயக்கத்தில் உருவாகியுள்ள 'விசாரணை' படம் இந்தியச் சிறைகளில் கைதிகள் சந்திக்கும் இன்னல்களை மையமாகக் கொண்டு கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் கோவையைச் சேர்ந்த சந்திரகுமார் எழுதிய 'லாக்அப்' என்ற நாவலை தழுவித்தான் விசாரணை படம் உருவாக்கப்பட்டுள்ளது.

வெனிஸ் திரைப்பட விழாவில் விசாரணை திரைப்படக் குழுவினரின் அறிமுக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியின் போது ஆட்டோ டிரைவர் சந்திரகுமாரும் கலந்து கொண்டார். அவருடன் வெற்றி மாறன், சமுத்திரக்கனி ஆகியோரும் பங்கேற்றனர்.

இந்த நிகழ்வில் பேசிய வெற்றி மாறன், '' இது ஒரு தனிமனிதரின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படம்தான் என்றாலும் உலகம் முழுக்க  முகமற்றவர்களாகத் திரியும் அனைத்து மக்களுக்குமான படம் '' என்றார். 

ஆட்டோ ஓட்டுநர் சந்திரகுமாருக்கு அஜிதா என்ற மனைவியும் ஜீவா என்ற மகளும் உள்ளனர். சாதாரண ஆட்டோ ஓட்டுநரின் கதைக்கு வெனிஸ் திரைப்பட விழாவில் அங்கீகாரம் கிடைத்ததை அறிந்து சந்திரகுமாரின் நண்பர்கள் அவரை மேலும் உற்சாகப்படுத்தி வருகின்றனர்.


Post your comment





Related News
மேடையிலே மண்டியிட்டு நன்றி தெரிவித்த விசாரணை படவில்லன் - புகைப்படம் விள்ளே
மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்ற தனுஷ்!
ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட விசாரணை!
விசாரணை படத்துக்கு கிடைத்த மற்றொரு மரியாதை!
விசாரணை படத்துக்கு 3 தேசிய விருது
பல மொழிகளில் ரீமேக் ஆகும் விசாரணை!
இந்தியில் ரீமேக் ஆகிறது விசாரணை
பாகுபலியில் விசாரணை பட வில்லன்
விசாரணை மாதிரி ஒரு படத்தை பார்த்ததில்லை – டிவிட்டரில் புகழும் ரஜினி
நாளை முதல் திரையை அதிரவைக்க வரும் விசாரணை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions