வெனிஸ் சர்வதேச படவிழாவில் போட்டியிடுகிறது விசாரணை

Bookmark and Share

வெனிஸ் சர்வதேச படவிழாவில் போட்டியிடுகிறது விசாரணை

தேசிய விருதுகளை பெற்ற ஆடுகளம் படத்துக்கு பிறகு வெற்றி மாறன் இயக்கியுள்ள படம் விசாரணை. அவரின் கிராஸ் ரூட் பிலிம் கம்பெனி, தனுஷின் வொண்டர் ஃபார் பிலிம் இணைந்து தயாரித்துள்ளது.

இதில் அட்டக்கத்தி தினேஷ், சமுத்திரக்கனி, ஆனந்தி, கிஷோர், முருகதாஸ் நடித்துள்ளனர். இதனை சந்திரகுமார் எழுதிய லாக்-அப் என்ற நாவலை தழுவி எடுத்துள்ளார் வெற்றிமாறன்.

குற்றமற்ற ஒருவன் போலீசார் சந்தேகப்பட்டு அழைத்துச் சென்று கொடூரமான விசாரணை நடத்துகிற கதை. ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைத்துள்ளார், ராமலிங்கம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஒரு மணிநேரமே ஓடும் சிறப்பு திரைப்படம் இது.காக்கா முட்டை பாணியிலான யதார்த்த சினிமா இது. சமீபத்தில் முதல் காப்பி தயாரானது.

தற்போது தனது விருது பயணத்தை தொடங்கி உள்ளது. வெனிஸ் நகரில் நடைபெறும் 72வது சர்வதேச திரைப்பட விழாவில் போட்டிப் பிரிவில் திரையிட விசாரணை தேர்ந்தெடுக்கப்பட்டிருகிறது.

இந்த படவிழாவில் திரையிட தேர்ந்தெடுக்கப்படுவதே கடினம். அதுவும் விசாரணை போட்டிபிரிவில் தேர்வாகி உள்ளது. அப்படி தேர்வான முதல் தமிழ் படம் இதுதான். செப்படம்பரில் தமிழ்நாட்டு தியேட்டர்களில் வெளியிட திட்டமிட்டிருக்கிறார்கள்.


Post your comment





Related News
மேடையிலே மண்டியிட்டு நன்றி தெரிவித்த விசாரணை படவில்லன் - புகைப்படம் விள்ளே
மகிழ்ச்சியின் உச்சத்துக்கே சென்ற தனுஷ்!
ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்ட விசாரணை!
விசாரணை படத்துக்கு கிடைத்த மற்றொரு மரியாதை!
விசாரணை படத்துக்கு 3 தேசிய விருது
பல மொழிகளில் ரீமேக் ஆகும் விசாரணை!
இந்தியில் ரீமேக் ஆகிறது விசாரணை
பாகுபலியில் விசாரணை பட வில்லன்
விசாரணை மாதிரி ஒரு படத்தை பார்த்ததில்லை – டிவிட்டரில் புகழும் ரஜினி
நாளை முதல் திரையை அதிரவைக்க வரும் விசாரணை!








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions