இந்தியில் ரீமேக் ஆகிறது விசாரணை

Bookmark and Share

இந்தியில் ரீமேக் ஆகிறது விசாரணை

வெற்றிமாறன் இயக்கத்தில் தமிழில் கடந்த வாரம் வெளிவந்த படம் ‘விசாரணை’. போலீஸ் பிடியில் சிக்கித் தவிக்கும் அப்பாவி இளைஞர்களை பற்றி வெளிவந்த இந்த படம் தமிழ் ரசிகர்களை மட்டுமல்லாது, திரையுலக பிரபலங்கள் பலரின் பாராட்டுதல்களையும் பெற்றுள்ளது. 

இப்படம் வெளிவருவதற்கு முன்பே பல்வேறு சர்வதேச விழாக்களில் கலந்துகொண்டு, பல்வேறு விருதுகளையும் வாங்கிக் குவித்துள்ளது. இன்னும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இப்படம் தற்போது இந்தியில் ரீமேக் ஆகவிருக்கிறது. 

இந்தியில் இப்படத்தின் ரீமேக் உரிமையை பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் வாங்கியுள்ளார். இந்தியில் இப்படத்தை பிரியதர்ஷனே இயக்கவுள்ளார். மேலும், இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் அக்ஷய்குமார் நடிக்கவிருக்கிறார். 

அக்ஷய்குமார் தற்போது தமிழில் ரஜினியுடன் இணைந்து ‘2.ஓ’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment

Related News
செல்பி எடுக்க வந்தவரின் செல்போனை மீண்டும் தட்டிவிட்ட சிவக்குமார்
என்னுடன் நடித்ததிலேயே சிறந்த தொழில்முறை நடிகை இவள் தான் - வரலட்சுமி
சசிகுமார் இயக்கத்தில் விஜய் நடிக்கவிருந்த கதையில் சூர்யா
சசிகுமார் படத்தை கிளாப் அடித்து துவக்கி வைத்த சமுத்திரகனி
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
பழம்பெரும் இந்தி நடிகர் திலிப் குமார் ஆஸ்பத்திரியில் அனுமதி
வீட்டை அபகரித்ததாக விஜயகுமார் புகார்: நடிகை வனிதா மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு
அதர்வாவின் குருதி ஆட்டம் படத்தில் இணைந்த இரு பிரபலங்கள்
சவூதியில் வெளியாகும் முதல் இந்திய படம் என்ற பெருமையை பெற்ற அக்‌ஷய் குமாரின் கோல்ட்
இதுவரை சிவகுமார் ஆற்றிய உரைகளிலேயே ஆகச்சிறந்த உரை இதுதான் என்றே சொல்லவேண்டும்..!
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2019. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions