விசாரணை படத்துக்கு 3 தேசிய விருது

Bookmark and Share

விசாரணை படத்துக்கு 3 தேசிய விருது

வெற்றிமாறன் இயக்கத்தில் இந்த வருடம் வெளிவந்த படம் ‘விசாரணை’. போலீஸ்காரர்களின் கையில் சில அப்பாவிகள் சிக்கிக் கொண்டால் அவர்கள் எந்த மாதிரியான விபரீதங்களை சந்திப்பார்கள் என்பதை இப்படத்தில் அப்பட்டமாக தோலுரித்துக் காட்டியிருப்பார் இயக்குனர் வெற்றிமாறன். 

இப்படம் ‘லாக்கப்’ என்ற நாவலை தழுவி எடுக்கப்பட்டது. இப்படத்தில் அட்டக்கத்தி தினேஷ், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்திருந்தனர். வெற்றிமாறன் தனுஷுடன் இணைந்து இந்த படத்தை தயாரித்திருந்தார். 

இப்படம் வெளிவருவதற்கு முன்பே பல்வேறு விருதுகளை வாங்கிக் குவித்தது. அதுமட்டுமில்லாமல், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்று, பலரின் பாராட்டுதல்களையும் பெற்றது. 

இந்நிலையில், இப்படம் சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருதுக்கு தேர்வாகியுள்ளது. அதுமட்டுமில்லாமல், இப்படத்தில் நடித்த சமுத்திரகனி சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதுக்கும், சிறந்த எடிட்டருக்கான தேசிய விருதுக்கு மறைந்த எடிட்டர் கிஷோரும் தேர்வாகியுள்ளனர். 

ஏற்கெனவே, இப்படத்திற்கு பல விருதுகள் கிடைத்து படக்குழுவினர் மகிழ்ச்சியில் ஆழ்ந்திருக்கும் நிலையில், மேலும் இப்படத்தில் இரண்டு தேசிய விருதுகள் கிடைத்திருப்பது படக்குழுவினருக்கு மேலும் மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions