பிப்ரவரி 5-ம் தேதி முதல் வெளியாகும் விசாரணை!

Bookmark and Share

பிப்ரவரி 5-ம்  தேதி முதல் வெளியாகும் விசாரணை!

நடிகர் தனுஷின் வொண்டர்பார் நிறுவனமும், வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனமும் இணைந்து தயரித்திருக்கும் படம் விசாரணை.

பிரபல எழுத்தாளர் எம்.சந்திரசேகரின் லாக் – அப் நாவலை அடிப்படையாக வைத்து விசாரணை உருவாகி இருக்கிறது. அட்டகத்தி தினேஷ், ஆனந்தி, முருகதாஸ், சமுத்திரக்கனி, கிஷோர் நடித்திருக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசைமயமைத்து இருக்கிறார்.

இப்படம் ஜனவரி 29ம் தேதி வெளிவரும் என்று இப்படத்தின் தயாரிப்பாளர்களான தனுஷ் மற்றும் வெற்றிமாறன் இணைந்து அறிவித்தார்கள். தற்போது ஜனவரி 29ம் தேதி ‘இறுதிச்சுற்று’ மற்றும் ‘அரண்மனை 2’ ஆகிய படங்கள் வெளிவர இருக்கிறது.

இதனால் ‘விசாரணை’ படத்துக்குப் போதுமான திரையரங்குகள் கிடைக்காது என்பதால் இப்படத்தின் உரிமையைக் கைப்பற்றி இருக்கும் லைக்கா நிறுவனம் ‘விசாரணை’ பிப்ரவரி 5ம் தேதி வெளிவரும் என்று அறிவித்திருக்கிறார்கள்.


Post your comment












About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions