விசாகா சிங் திடீர் மாயம்

Bookmark and Share

விசாகா சிங் திடீர் மாயம்

பட வாய்ப்பு இல்லாவிட்டால் நடிகைகள் வீட்டில் முடங்காமல் பிஸ்னஸ், வெளிநாட்டு சேனல்களில் வேலை என்று சமீபகாலங்களில் பறந்துவிடுகிறார்கள். ‘கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படத்தின் மூலம் பிரபலமானவர் விசாகா சிங்.

‘வாலிப ராஜா’ படத்தில் நடித்து வரும் அவர் ‘ஒரு ஊர்ல ரெண்டு ராஜா’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தார். புதியபட வாய்ப்புகளுக்கு காத்திருந்து கைகூடாததால் ஏமாற்றம் அடைந்தார். அவ்வப்போது ஆடியோ விழாக்களிலாவது தலைகாட்டிக்கொண்டிருந்தார்.

சமீபகாலங்களில் நடந்த விழாக்களில் அவர் தலைதென்படவில்லை. கோலிவுட்டிலிருந்து மாயமானவரைபற்றி விசாரித்தபோது வெளிநாடு சென்றது தெரியவந்தது.

விசாகாவின் தந்தை, நிதி முதலீடு செய்யும் தொழில் செய்து வருகிறார். லண்டன், துபாயில் இதற்கான நிறுவனம் உள்ளது. அங்கு பகுதி நேரமாக ஏற்கனவே நிர்வாக பணி செய்துள்ளார் விசாகா.

கடந்தவாரம் ரோம் நகரில் புதிதாக நிதி முதலீடு நிறுவனம் அமைத்திருக்கிறார். அங்கு சென்ற விசாகாவுக்கு இந்தியர்கள் இணைந்து நடத்திய அழகி போட்டிக்கு நடுவராக இருக்க அழைப்பு வந்தது. அதை ஏற்று நடுவராக இருந்தார்.

இதுபற்றி அவர் கூறும்போது, ’தோற்றத்தை மட்டுமல்லாமல் திறமை மற்றும் தகுதியையும் பார்த்தே வெற்றியாளர்களை தேர்வு செய்தேன்’ என்றார். ‘மீண்டும் நடிக்க வருவது எப்போது?’ என்றவுடன், ‘அழைப்பு வந்தால் உடனே வருவேன்’ என சுருக்கமாக பதிலை முடித்துக்கொண்டார். 

 


Post your comment





Related News
ரன்வீர் சிங் - தீபிகா படுகோனே திருமண ஏற்பாடுகள் தீவிரம்
"எம். ஜி. ஆர்" திரைப்படத்தின் 'டீஸர்' வெளியீடு
ஸ்ரீரெட்டி சர்ச்சைக்கு பதிலளித்த நடிகை காஜல்! என்ன சொன்னார் பாருங்கள்..
விஜய்யின் மெர்சல் செய்த பிரம்மாண்ட சாதனை! அதிகாரப்பூர்வ அறிவிப்பு
கோ, அஞ்சான் பட நடிகைக்கு ரோட்டில் நடந்த பரிதாப சம்பவம்!
பிரபல நடிகரின் படத்தில் ஐட்டம் பாடலுக்கு நடனமாடும் ரகுல் பிரீத் சிங்!
சினிமாவில் நிலைத்து நிற்க ரகுல் ப்ரீத் சிங் சொல்லும் யோசனை
சூர்யாவுடன் இணைந்த ரகுல் ப்ரீத் சிங்
கல்யாணதுக்கு ஓகே தான், ஆனால் அதை மட்டும் செய்ய மாட்டேன் - ஓபனாக பேசிய முன்னணி நடிகை.!
விருது விழாவில் ஸ்ரீதேவிக்கு உருக்கமாக அஞ்சலி செலுத்திய முன்னணி ஹீரோ








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions