நடிகர் சங்க கட்டிட கட்ட படம் நடிப்பதாக விஷால் அறிவிப்பு!

Bookmark and Share

நடிகர் சங்க கட்டிட கட்ட படம் நடிப்பதாக விஷால் அறிவிப்பு!

தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் கதாநாயகனாக நடித்திருக்கும் புதிய படம், ‘கதகளி’. இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக கேத்தரின் தெரசா நடித்திருக்கிறார். பாண்டிராஜ் டைரக்டு செய்திருக்கிறார். இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நேற்று நடந்தது. அதில் கலந்துகொண்டு விஷால் பேசியதாவது:- 

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுவதற்காக ஒரு படத்தில் பல கதாநாயகர்கள் இணைந்து நடிக்க முடிவு செய்திருக்கிறோம். அதில் கார்த்தி, ஜெயம் ரவி, ஆர்யா, ஜீவா ஆகியோருடன் நானும் இணைந்து நடிப்பது என்று ஏற்கனவே முடிவு செய்திருக்கிறோம். இந்த படத்தில் மேலும் பல கதாநாயகர்கள் இணையலாம். 

இதற்கான டைரக்டர் தேர்வு நடைபெறுகிறது. ‘கதகளி’ படத்தின் டிரெய்லரில் ‘காண்டம்’ என்ற வார்த்தை இடம்பெறுகிறது. இதுபற்றி ஒருவர் தனது ‘டுவிட்டரில்’ விமர்சித்து இருக்கிறார். ‘காண்டம்’ என்பது தவறான வார்த்தை அல்ல. ‘செக்ஸ்’ கல்வி அவசியம் என்று பேசப்படுகிற இந்த காலகட்டத்தில், ‘காண்டம்’ தவறான வார்த்தை என்று கூறுவது தவறு. 

எந்த உள்நோக்கத்துடனும் படத்தில் இந்த காட்சி வைக்கப்படவில்லை. சினிமாவுக்கு தணிக்கை என்று ஒன்று இருக்கிறது. அதை தாண்டி தவறுகள் நடைபெறாது. 
இவ்வாறு விஷால் கூறினார். 

அவரிடம், “வருகிற பொங்கல் பண்டிகைக்கு ‘கதகளி’ படத்துடன் உங்கள் நண்பர்களின் ‘தாரை தப்பட்டை’, ‘ரஜினி முருகன்’, ‘கெத்து’ ஆகிய 3 படங்களும் மோதுகிறதே?” என்று கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்து விஷால் கூறும்போது, “இந்த போட்டியை தவிர்க்கமுடியாது. பொதுவாக எல்லா படங்களுமே வெற்றி பெறவேண்டுமென்று வேண்டுபவன் நான். 

4 படங்களும் பெரிய வெற்றி பெறவேண்டும் என்று கூடுதலாக வேண்டிக்கொள்வேன்” என்றார். பேட்டியின்போது, டைரக்டர் பாண்டிராஜ், நடிகர் சங்க துணைத்தலைவர் கருணாஸ், நடிகர்கள் மைம்கோபி, மதுசூதன், பவன், முனீஷ்காந்த், ஆத்மா, இசையமைப்பாளர் ப்ஹாப் தமிழா ஆகியோர் உடன் இருந்தார்கள்.

 


Post your comment





Related News
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions