
நடிகர் சங்கத்தலைவராக இருந்து பின்னர் அரசியலுக்கு வந்த நடிகர் விஜயகாந்தை தொடர்ந்து சரத்குமாரும் நடிகர் சங்கம், அரசியல் என இரண்டு துறைகளிலும் இருந்து வருகிறார்.
இந்த நிலையில், நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிடப்போவதாக சொல்லி பின் இல்லை என்றார் விஷால். இதனால் அரசியலில் நுழைய வேண்டும் என்கிற ஆசை விஷாலுக்கு இருப்பதினால்தான் அவர் நடிகர் சங்க தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பவில்லை என்று செய்திகள் வெளியாகியுள்ளது.
ஆனால் இதுபற்றி விஷால் அரசியலில் குதிக்கும் ஆர்வம் எதுவும் இப்போதைக்கு இல்லை. எனது முழுக்கவனமும் சினிமாவில் நடிப்பதில்தான் உள்ளது என்கிறார்.
மேலும், அவர் என்னைப்பொறுத்தவரை நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்து விட்டால் அரசியலுக்கு வந்துதான் செய்ய வேண்டும் என்கிற கட்டாயம் இல்லை. ஒரு நடிகராக இருந்தும் செய்யலாம்.
அப்படித்தான் இப்போது நான் சமூக சேவைகள் செய்து வருகிறேன். அந்த வகையில், ஒரு எம்.எல்.ஏ. செய்யவேண்டிய நல்ல விஷயங்களை இப்போது நான் ஒரு நடிகராக செய்து வருகிறேன். இது தொடரும் என்றார் விஷால்.
Post your comment