சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்: விஷால் பேட்டி

Bookmark and Share

சட்டமன்ற தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும்: விஷால் பேட்டி

மறைந்த திரைப்பட மக்கள் தொடர்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன் உருவப்பட திறப்பு நிகழ்ச்சியும் அஞ்சலி கூட்டமும் சென்னை சோவியத்கலாசார மையத்தில் நடந்தது.

இதில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டு பிலிம் நியூஸ் ஆனந்தன் உருவப்படத்தை திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால், நடிகர் பிரபு, தயாரிப்பாளர் சங்க செயலாளர் டி.சிவா, டைரக்டர் சங்க தலைவர் விக்ரமன், பெப்சி தலைவர் ஜி.சிவா, உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சி முடிந்து வெளியே வந்த விஷாலிடம் சட்டமன்ற தேர்தல் பற்றி நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதில் அளித்து விஷால் கூறியதாவது: - 

‘‘சட்டமன்ற தேர்தலில் அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும். 100 சதவீதம் வாக்குகள் பதிவாக வேண்டும். தேர்தலில் முதல் நிலை வாக்காளர்கள் ஓட்டுப்போட வருவது இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.

யாரும் ஓட்டுப்போடாமல் இருக்க கூடாது. புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள முதல் நிலை வாக்காளர்கள் எல்லோரும் வாக்களிக்க முன் வரவேண்டும்.

வாக்காளர்களுக்கு ஓட்டுப்போட கொடுப்பதற்காக பதுக்கிய பணத்தை பறக்கும் படையினர் கைப்பற்றுவதாக செய்திகள் வருகின்றன. ஆனால் பணம் வாங்கியதாக யாரும் பிடிபடவில்லை. நடிகர் கமல்ஹாசன் தேர்தலில் நிச்சயம் ஓட்டுப்போட வருவார்.

இவ்வாறு விஷால் கூறினார்.


Post your comment

Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions