விஷால் வேட்புமனு தாக்கல்; ஆதரவாக திரண்ட திரையுலக நட்சதிரங்கள்

Bookmark and Share

விஷால் வேட்புமனு தாக்கல்; ஆதரவாக திரண்ட திரையுலக நட்சதிரங்கள்

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வருகிற 18ம் தேதி நடக்க உள்ளது. இந்த தேர்தலில் சரத்குமார் தலைமையில் ஒரு அணியும், விஷால் தலைமையில் மற்றொரு அணியும் போட்டியிடுகின்றன.

தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது. தி.நகர் அபிபுல்லா சாலையில் பழைய நடிகர் சங்க கட்டிடம் அருகே உள்ள அலுவலகத்தில் மனுக்கள் பெறப்பட்டன. தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடும் சரத்குமார் நேற்று காலை தேர்தல் அதிகாரியான நீதிபதி பத்மநாபனிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

நடிகர் சங்கத் தேர்தலில் மனுத்தாக்கல் செய்வதற்கு முன்பாக விஷால் தலைமையிலான அணியினர் இன்று காலை சுமார் 7 மணியளவில் கலைவாணர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளனர். பின்னர் சுமார் 7.30 மணியளவில் எம்.ஜி.ஆர் சமாதிக்கு சென்று அவரது நினைவிடத்தில் மாலைகள் வைத்து மரியாதை செலுத்தியுள்ளனர்.

அதன் பின்னரே விஷால் அணியினர் இன்று காலை தங்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருக்கின்றனர். இதையடுத்து தங்கள் வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் வேலையில் விஷால் அணியினர் தீவிரமாக ஈடுபட உள்ளனர். இரண்டு அணியினரும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருப்பதால் தற்போது நடிகர் சங்கத் தேர்தல் பரபரப்பான கட்டத்தை எட்டியிருக்கிறது.

நடிகர் கமல்ஹாசன், குஷ்பூ, விவேக், பிரகாஷ் ராஜ் ஆகியோர் தங்கள் ஆதரவை விஷால் அணியினருக்கு தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.

தேர்தலில் போட்டியிட தாக்கலான வேட்புமனுக்கள் 4-ந்தேதி (ஞாயிறு) காலை பரிசீலிக்கப்பட்டு அன்று மாலை 4 மணிக்கு போட்டியிட தகுதியான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இறுதி வேட்பாளர் பட்டியல் 8-ந் தேதி (வியாழக்கிழமை) வெளியிடப்படும்.

சென்னை மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள செயின்ட் எப்பாஸ் மெட்ரிக்குலேசன் மேல் நிலைப்பள்ளியில் தேர்தல் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அன்று காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும். தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபன் நியமிக்கப்பட்டுள்ளார்.


Post your comment





Related News
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions