நான் கேரளாவுக்கு எதிரி அல்ல: நடிகர் விஷால் பேச்சு

Bookmark and Share

நான் கேரளாவுக்கு எதிரி அல்ல: நடிகர் விஷால் பேச்சு

சுசீந்திரன் டைரக்டு செய்து வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் விஷால்-காஜல் அகர்வால் நடித்துள்ள படம், ‘பாயும் புலி’. இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னை சத்யம் தியேட்டரில் நேற்று நடந்தது. பாடல்களை இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் வெளியிட்டார். விழாவில் கலந்துகொண்டு நடிகர் விஷால் பேசியதாவது:- 

‘‘இங்கே வந்திருந்த விருந்தினர்களுக்கு பூங்கொத்து கொடுக்கவில்லை. அதற்கு ஆகும் செலவை 2 ஏழை மாணவிகளுக்கு கல்விக்கான உதவியாக கொடுக்கலாம் என்றேன். அதன்படி இங்கு கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.

இதனால் என்னை பூங்கொத்து தயாரிப்பவர்களுக்கு எதிரி என்று சொல்லவேண்டாம். நான் வாயில்லாத ஜீவன்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்தேன். தெரு நாய்கள் கொல்லப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தேன். அதை அரசியலாக்கி விட்டார்கள். 

நான் கேரளாவுக்கு எதிரி அல்ல. அடிமாடுகள் துன்புறுத்துப்படுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து குரல் கொடுத்தேன்.

அதற்கும் விமர்சிக்கப்பட்டேன். வாயில்லாத ஜீவன்களுக்கு ஆதரவாக குரல் கொடுப்பது தவறா? சினிமா என் தொழில். சினிமா என் தாய். அதற்கு பாதிப்பு வரும்போது, எனக்கு கோபம் வரும். அப்படித்தான் திருட்டு வி.சி.டி.க்கு எதிராக போராடினேன். எனக்கு அரசியல் ஆர்வம் இல்லை. விளம்பர நோக்கமும் இல்லை’’. 

இவ்வாறு விஷால் பேசினார். 

விழாவில் புதுச்சேரி சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜவேலு, கவிஞர் வைரமுத்து, தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் டி.சிவா, பட அதிபர்கள் எஸ்.மதன், பி.மதன், அன்புச்செழியன், கே.ராஜன், இசையமைப்பாளர் டி.இமான், வினியோகஸ்தர்கள் சங்க தலைவர் அருள்பதி, டைரக்டர்கள் கே.எஸ்.ரவிகுமார், சுசீந்திரன், பாண்டிராஜ், திரு, நடிகை காஜல் அகர்வால், நடிகர் சூரி, நடிகர் விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டி ஆகியோரும் பேசினார்கள். முன்னதாக, மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் உருவப்படம் திறந்து வைக்கப்பட்டது.


Post your comment





Related News
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions