ஐகோர்ட்டில் நடிகர் விஷால் உள்பட 3 பேர் கேவியட் மனு தாக்கல்

Bookmark and Share

ஐகோர்ட்டில் நடிகர் விஷால் உள்பட 3 பேர் கேவியட் மனு தாக்கல்

தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்கத்தின் தேர்தல் ஜூலை 15-ந் தேதி நடைபெறும் என்று கடந்த ஜூன் 5-ந் தேதி அறிவிப்பு வெளியானது. இந்த அறிவிப்பை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் விஷால், கார்த்தி, நாசர் ஆகியோர் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த வழக்கு நீதிபதி கே.ரவிசந்திரபாபு முன்பு விசாரணைக்கு வந்தது. 

இதன்பின்னர் இடைக்கால மனு மீது நீதிபதி கடந்தவாரம் தீர்ப்பு அளித்தார். அதில், நடிகர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடத்த தடை விதித்தார்.

இதையடுத்து இந்த இடைக்கால தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்போவதாக நடிகர்கள் சங்கத்தின் தலைவர் சரத்குமார் கூறினார். இந்த நிலையில், சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் விஷால், கார்த்தி, நாசர் ஆகியோர் ‘கேவியட்’ மனு தாக்கல் செய்துள்ளனர். 

அந்த மனுவில், ‘நீதிபதி ரவிசந்திரபாபு பிறப்பித்த தீர்ப்பை எதிர்த்து எதிர்மனுதாரர் (நடிகர்கள் சங்கம்) மேல்முறையீடு செய்யும்போது, எங்களுடைய தரப்பின் கருத்தை கேட்கவேண்டும்‘ என்று கூறப்பட்டுள்ளது.


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions