நடிகர் சங்கத் தேர்தல் கருத்து கணிப்பு; இரண்டு மடங்கு முன்னிலையில் விஷால்

Bookmark and Share

நடிகர் சங்கத் தேர்தல் கருத்து கணிப்பு; இரண்டு மடங்கு முன்னிலையில் விஷால்

அரசியல் காலமாக மாறியுள்ள நடிகர் சங்கத் தேர்தலில் மாறி மாறி ஒருவருக்கு ஒருவர் குறை கூறி வருகின்றனர். இதில் விஷால் தலைமையிலான பாண்டவர் அணிக்குத்தான் வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது என்று பரவலாக பேசப்பட்டு வருகிறது.

இந்நிலையில் அவர்களுக்கு கூடுதல் பலம் சேர்க்கும் விதமாக வாட்ஸ் அப்பில் ஒரு கருத்து கணிப்பும் பரவி வருகிறது. அதில் விஷால் தலைமையிலான அணிக்கு 64 சதவீத ஓட்டுகளும், சரத்குமார் தலைமையிலான அணிக்கு 36 சதவீத ஓட்டுகளும் கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை திரைப்பட மற்றும் நடிப்பு கல்லூரி மாணவர்கள் சார்பில் இந்த கருத்துக் கணிப்பு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழக நடிகர் சங்கத் தேரிதலில் முதல் முறையாக விஷால் அணி புதிய வரலாறுகாணாத எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது என்றும் சங்க உறுப்பினர்களிடையே புதிய எழுச்சியை உண்டு பண்ணியிருப்பதாகவும், விஷால் அணி இதில் புதிய வரலாறு படைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் இருந்தே நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் தலைமையிலான அணியினர் பலம் அதிகரித்துக் கொண்டே போவது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions