தயவு செய்து அந்த இரண்டு மது கடைகளை மூடுங்க - விஷால் வேண்டுகோள் அறிக்கை.!

Bookmark and Share

தயவு செய்து அந்த இரண்டு மது கடைகளை மூடுங்க - விஷால் வேண்டுகோள் அறிக்கை.!

2016 ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று நான்காவது முறையாக முதல் அமைச்சராக பதவியேற்ற புரட்சித்தலைவி அம்மா அவர்கள் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்று உறுதியளித்து அதனை தொடங்கியும் வைத்தார்.

அமரர் புரட்சித்தலைவி அம்மா அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு வரும் 24 ஆம் தேதி 500 மதுக்கடைகளை தமிழக அரசு மூடவிருப்பதாக தகவல் என செய்திகள் வெளியாகிறது. இது வரவேற்கப்பட வேண்டிய ஒன்று. 

ஆர்கே நகர் தொகுதிக்குட்பட்ட புது வண்ணாரப்பேட்டை - திருவெற்றியூர் நெடுஞ்சாலையில் க்ராஸ் ரோட் ஜங்ஷன் பகுதியில்  அமைந்துள்ள இரண்டு மதுக்கடைகள் அங்கிருக்கும் பொதுமக்களுக்கு மிகவும் இடையூறாக இருக்கின்றன. இந்த மதுக்கடைகளால் பெண்களும் மாணவர்களும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். 

இந்த மதுக்கடைகளை மூடச்சொல்லி அடிக்கடி போராட்டங்கள் நடைபெற்றாலும் அரசு இன்னும் அவற்றுக்கு செவி சாய்க்கவில்லை. எனவே மூடவிருக்கும் 500 மதுக்கடைகள் பட்டியலில் இந்த மதுக்கடைகளையும் சேர்க்க ஆவண செய்யுமாறு தமிழக அரசையும் ஆர்கே நகர் சட்டப்பேரவை தொகுதி உறுப்பினர் உயர்திரு. தினகரன் அவர்களையும் கேட்டுக்கொள்கிறேன். 

இதேபோல் தமிழ்நாடு முழுக்கவிருக்கும் பிரச்னைக்குரிய, பொதுமக்களுக்கும் மாணவர்களுக்கும் இடையூறாக இருக்கும் மதுக்கடைகளையும் இந்த பட்டியலில் சேர்க்க தமிழக அரசை வேண்டிக்கொள்கிறேன்.


Post your comment

Related News
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்
விஷாலுடன் இணையும் ஜெயம் ரவி பட இயக்குநர்
விஷாலுக்கு அதிர்ச்சி கொடுத்த ஸ்ரீரெட்டி! என்னவாக இருக்கும்..
மூன்று சூப்பர் ஹீரோக்கள் வெளியிட்ட '' வேட்டை நாய்'' டீசர் !
அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்திருந்த இரும்புதிரை இயக்குனரின் அடுத்தபடம்- முன்னணி நடிகருடன்
விஷாலின் இரும்புத்திரையை பாராட்டிய மகேஷ் பாபு
About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions