நடிகர் சங்க அறக்கட்டளைக்கு 9 பேர் அறங்காவலர்களாக நியமனம்!

Bookmark and Share

நடிகர் சங்க அறக்கட்டளைக்கு 9 பேர் அறங்காவலர்களாக நியமனம்!

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தலில் தலைவராக நாசரும், பொதுச்செயலாளராக விஷாலும் தேர்வானார்கள். பொருளாளராக கார்த்தி, துணைத்தலைவர்களாக பொன்வண்ணன், கருணாஸ் ஆகியோரும் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள். புதிதாக 24 செயற்குழு உறுப்பினர்களும் தேர்வு செய்யப்பட்டனர். 

நடிகர் சங்கத்தின் முதல் செயற்குழு கூட்டம் கடந்த 25-ந் தேதி சென்னையில் நடந்தது. அந்த கூட்டத்தில் நடிகர் சங்கத்துக்கு புதிய கட்டிடம் கட்டுதல் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.

அத்துடன் நடிகர் சங்க அறக்கட்டளையின் உறுப்பினர்களாக கமல்ஹாசன், நாசர், விஷால், கார்த்தி ஆகியோரை நியமித்து தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. 

இந்த நிலையில் நாசர் தலைமையில் நடிகர் சங்கத்தின் செயற்குழு இரண்டாவது தடவையாக சென்னை தியாகராய நகரில் உள்ள நட்சத்திர ஓட்டலில் அவசரமாக கூடியது.

இந்த கூட்டத்தில் நடிகர் சங்கத்தின் வரவு செலவு கணக்கு விவரங்கள் பற்றி விவாதிக்கப்பட்டது. நடிகர் சூர்யா ஏற்கனவே சங்கத்துக்கு ரூ.10 லட்சம் நன்கொடை வழங்கினார். அந்த தொகையை வைத்து தென்னிந்திய நடிகர் சங்கம் பெயரில் புதிய வங்கி கணக்கு தொடங்கப்பட்டுள்ளதாக செயற்குழுவில் அறிவிக்கப்பட்டது.

பின் நடிகர் சங்கத்தின் புதிய அறங்காவலர்களாக எஸ்.வி.சேகர், ராஜேஷ், ஐசரி கணேஷ், பூச்சி முருகன், குட்டி பத்மினி ஆகிய மேலும் 5 பேரை நியமனம் செய்து செயற்குழுவில் ஒப்புதல் பெறப்பட்டது. 

இவர்களையும் சேர்த்து நடிகர் சங்க அறக்கட்டளைக்கு மொத்தம் 9 பேர் அறங்காவலர்களாக நியமிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions