என் தந்தை பிச்சை எடுத்ததை பார்த்ததால் தான் இதை செய்கிறேன்! விஷால்

Bookmark and Share

என் தந்தை பிச்சை எடுத்ததை பார்த்ததால் தான் இதை செய்கிறேன்! விஷால்

நடிகர் சங்க தேர்தலில் வெற்றி பெற்ற விஷாலின் அடுத்த டார்கெட் தயாரிப்பாளர் சங்கம். திருட்டு டிவிடிக்கு எதிராக பலமுறை விஷால் குரல் கொடுத்தும் தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள் அதற்கு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அவரின் நீண்டகால குற்றச்சாட்டு.

விரைவில் நடைபெறவுள்ள தயாரிப்பாளர் சங்க தேர்தலில் விஷால் தலைவர் பதவிக்கும், பிரகாஷ்ராஜ் மற்றும் கவுதம் மேனன் ஆகியோர் துணை தலைவர் பதவிக்கும் போட்டியிடுகின்றனர்.

தன் தந்தை தயாரித்த படத்திற்காக பிச்சை எடுத்ததை நேரில் பார்த்ததால் தான் இந்த தேர்தலில் போட்டியிடுவதாக விஷால் தெரிவித்துள்ளார்.

நான் என்னுடைய தந்தையிடம் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நிற்க போகிறேன் என்று கூறியதும். என்னுடைய தந்தை எதற்காக நிற்க போகிறாய் என்று கேட்டார் ??

என்னுடைய தந்தை “ஐ லவ் இந்தியா“ என்ற படத்தை எடுத்தார். அவர் மகாபிரபு போன்ற வெற்றி படங்களை எடுத்தவர். என்னுடைய பள்ளி பருவத்தில் என் தந்தை ஒரு Labல் நின்று பிச்சை எடுப்பதை நான் பார்த்தேன். அவர் அவர்களிடம் சொன்ன தேதியில் படத்தை வெளியிட வேண்டும் எனக்கு உதவுங்கள். நான் தவறேதும் செய்யவில்லை நான் செய்த ஒரே தவறு இந்த படத்தை எடுத்தது தான் என்றார்.

அவர் பிச்சை எடுத்ததை நான் கண்ணால் பார்த்தேன். நான் இந்த தேர்தலில் நிற்க காரணம் அதுவாக கூட இருக்கலாம். என்னுடைய தந்தை நடந்த அந்த கஷ்டம் எந்த தயாரிப்பாளருக்கும் நடக்காது இனிமேல். நீ தயாரிப்பாளர் சங்க தேர்தலில் நிற்கிறாய் , உன்னை எதிர்த்து நிற்ப்பது எல்லாம் என்னுடைய நண்பர்கள் தான் , நான் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலும் உறுப்பினர் , தெலுங்குவிலும் உறுப்பினர்.

நீ இந்த தேர்தலில் நிற்கிறாய் என்றால் தயாரிப்பாளர் சங்க உறுப்பினர்கள் அனைவருக்கும் கால் கிரவுண்டோ அல்லது அரை கிரவுண்டோ இடத்தை அளிக்க வேண்டாம். இதை செய்தால் நீ நம் வீட்டிற்கு வா அல்லது , வராதே என்றார் அதனால் தான் இந்த தேர்தலில் நிற்கிறேன்.


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions