தஞ்சையில் நிலம் வாங்கி விவசாயம் செய்வேன்: விஷால் பேட்டி

Bookmark and Share

தஞ்சையில் நிலம் வாங்கி விவசாயம் செய்வேன்: விஷால் பேட்டி

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ஆதிரங்கத்தில் நெல் திருவிழா நடைபெற்றது. இதில் நடிகர் விஷால் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:–

விதை விதைக்கும் பணிதான் எனக்கும் பிடிக்கும். சென்னையில் நாசர், கருணாஸ், கார்த்தி, நான் ஆகியோர் சேர்ந்து ஒரு அணிக்கான விதையை விதைத்தோம். இன்று அது பெரிதாக உருவாகி தென்னிந்திய நடிகர் சங்கம் என்ற ஒன்றையே நடத்திக்காட்டும் அளவில் வளர்ந்துள்ளது.

விவசாயிகளுடைய உணர்வுகளை புரிந்துகொண்டு பேச வேண்டுமானால், நானும் விவசாயியாக மாறவேண்டும். விரைவில் தஞ்சாவூர் மாவட்டத்தில் என்னுடைய உழைப்பில் உருவான பணத்திலிருந்து நிலம் வாங்கி விவசாயம் செய்ய உள்ளேன். என்னுடைய நீண்ட நாள் விருப்பமும் அதுதான்.

எனது பள்ளிக்காலத்தில் படித்த இயற்பியல், வேதியியல் பாடம் எல்லாம் மறந்துவிட்டன. ஆனால் இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பு விவசாயம் என்று படித்தது மட்டும் இன்னும் மறக்காமல் உள்ளது.

அந்த விவசாயத்தை பொறியியல் துறை, மருத்துவத்துறை போன்ற விவசாயத்தையும் ஒரு துறையாக மாற்றி சமுதாயத்தில் பெரும் மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

விவசாயிகளுக்கு தன்னம்பிக்கை வர வேண்டும். சினிமா உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் பிரச்சனை இருக்கவே செய்கிறது. கடன் உள்ளிட்ட எந்த பிரச்சனை வந்தாலும் தற்கொலை என்ற முடிவுக்கு செல்லக்கூடாது. அது நிரந்தர தீர்வும் அல்ல.

இவ்வாறு அவர் கூறினார்.


Post your comment





Related News
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions