மூத்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவுக்கு சரத்குமார், ராதாரவிக்கு அழைப்பு இல்லை: விஷால் உறுதி

Bookmark and Share

மூத்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவுக்கு சரத்குமார், ராதாரவிக்கு அழைப்பு இல்லை: விஷால் உறுதி

நடிகர் சங்கத்துக்கு புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு பற்பல நல்ல விஷயங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், வருகிற நவ.27-ந் தேதி நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நடைபெறவிருக்கிறது. இதையொட்டி, மூத்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவும், பாராட்டு விழாவும் நடைபெற இருக்கிறது. 

இந்த விழாவுக்கு பல்வேறு கலைஞர்களுக்கும் அழைப்பு விடப்பட்டு வருகிறது. இந்நிலையில், நடிகர் சங்கத்தின் முன்னாள் நிர்வாகிகளான சரத்குமாருக்கும், ராதாரவிக்கும் இந்த விழாவுக்கு அழைப்பு விடுக்கப்படுமா? என்ற கேள்விக்கு நடிகர் சங்கத்தின் பொதுச்செயலாளர் விஷால் கூறும்போது, 

மூத்த கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவில் முன்னாள் நிர்வாகிகளான சரத்குமாருக்கும், ராதாரவிக்கும் அழைப்பு விடுக்கவில்லை. செவாலியே விருது பெற்றதற்காக நடிகர் கமல்ஹாசனுக்கு பாராட்டு விழா நடத்தவிருக்கிறோம் என்றார்.

மேலும், முதல்வர் ஜெயலலிதாவும், முன்னாள் முதல்வர் கருணாநிதியும் பூரண நலம் அடைந்து வீடு திரும்ப பிரார்த்திப்பதாகவும் அவர் கூறினார். 


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions