ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேச்சு: திருச்சியில் இன்று நடிகர் விஷால்

Bookmark and Share

ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேச்சு: திருச்சியில் இன்று நடிகர் விஷால்

விலங்குகள் நல அமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் நடிகர் விஷால் பங்கேற்று பேசினார். அப்போது அவர் ஜல்லிக்கட்டுக்கு தடை விதிக்கப்பட்டது வரவேற்கத்தக்கது என்றார்.

இதற்கு தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழகத்தினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். நடிகர் விஷால் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் விஷாலை கண்டித்து திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே தமிழர் வீர விளையாட்டு மீட்பு கழகத்தினர் இன்று போராட்டம் நடத்தினர். இதற்கு தலைமை ஒருங்கிணைப்பாளர் ராஜேஷ் தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் நடிகர் விஷாலின் உருவ பொம்மையை தீ வைத்து எரிக்க முயன்றனர். உடனே அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் அதனை தடுத்து நிறுத்தினர்.

இதுகுறித்து ராஜேஷ் கூறும்போது, நடிகர் விஷால் உடனே மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில் விஷாலின் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்துவோம். விஷால் படம் திரையிடப்படும் தியேட்டர்கள் முன்பு கருப்பு கொடி காட்டி போராட்டம் நடத்துவோம் என்றார்.

இந்த சம்பவத்தால் திருச்சி பஸ் நிலைய பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

 


Post your comment





Related News








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions