மீண்டும் மதுரை கதைகளத்தில் விஷால்!

Bookmark and Share

மீண்டும் மதுரை கதைகளத்தில் விஷால்!

வேந்தர் மூவீஸ் தயாரிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் பாயும் புலி படத்தில் நடித்து வருகிறார் விஷால். கடந்த சில மாதங்களாக நடைபெற் வந்த பாயும் புலி படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டது.

இதை தொடர்ந்து அடுத்து பாண்டிராஜ் இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் விஷால். இந்த படத்தின் படப்பிடிப்பு இம்மாதம் தொடங்கி செப்டம்பர் மாதத்திற்குள் முடிந்து விடும் என்று சொல்லப்படுகிறது. பாண்டிராஜ் இயக்கும் படத்தைத் தொடர்ந்து கொம்பன் வெற்றிப் படத்தை இயக்கிய முத்தையா இயக்கும் படத்தில் நடிக்க இருக்கிறார் விஷால்!

பிரபல விநியோகஸ்தரும்  வெள்ளக்கார துரை படத்தை தயாரித்தவருமான கோபுரம் ஃபிலிம்ஸ் மதுரை ஜி. அன்புச்செழியன் இப்படத்தை தயாரிக்கிறார். செப்டம்பர் மாதம் படப்பிடிப்பு துவங்க திட்டமிடப்பட்டிருக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்திற்கு இசை அமைக்க டி.இமானிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருகிறார்களாம்!

குட்டிப்புலி கொம்பன் படங்களைப் போலவே விஷால் நடிக்கும் இப்படமும் மதுரைப் பின்னணியில் சம்பவங்கள் நடைபெறும் நேட்டிவிட்டி, ஃபேமிலி சென்டிமென்ட் படமாக இருக்குமாம். ஏற்கனவே விஷால் நடித்த சண்டக்கோழி, திமிரு, பாண்டியநாடு போன்ற படங்கள் மதுரையை பின்னணியாக கொண்டு எடுக்கப்பட்டு வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions