விஷால் பட வசூல் குறைந்ததற்கு தயாரிப்பாளர் சங்கம் காரணமா?

Bookmark and Share

விஷால் பட வசூல் குறைந்ததற்கு தயாரிப்பாளர் சங்கம் காரணமா?

சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்த பாயும்புலி செப்டம்பர் 4 ஆம் தேதி வெளியானது. இப்படத்தில் விஷால், காஜல், சூரி, சமுத்திரக்கனி உட்பட பெரியநட்சத்திரங்கள் மட்டுமின்றி சுசீந்திரன் இயக்கம், இமான் இசை வைரமுத்து பாடல்கள், வேல்ராஜ் ஒளிப்பதிவு உள்ளிட்ட பெயர் பெற்ற  தொழில்நுட்பக்கலைஞர்கள் இருந்தனர்.

இவ்வளவு பேர் இருந்தும் படத்தின் வசூல் குறைவாக இருப்பதாக தெரிகிறது. இதற்குக் காரணம், தயாரிப்பாளர்சங்கம் எடுத்த புதியமுடிவுதான் என்று சொல்லப்படுகிறது. 

தொலைக்காட்சிகளில் விளம்பரம் செய்யக்கூடாது என்று அவர்கள் முடிவெடுத்ததோடு, தந்தி, பொதிகை, ஜெயாமேக்ஸ் ஆகிய தொலைக்காட்சிகளில் மட்டும்தான் நிகழ்ச்சிகள் செய்யவேண்டும் என்றும் தயாரிப்பாளர்கள்சங்கம் உத்தரவிட்டிருந்தது. 

இதை பாயும்புலி படக்குழுவும் அப்படியே கடைபிடித்துள்ளது. அதனால் இந்தப்பபடம் வெளியானதே பலருக்குத் தெரியாமல் போய்விட்டதென்கிறார்கள்.

விஷால் போன்ற நடிகரின் படம் சரியில்லையென்றால் கூட ஓரளவுக்கு வசூல் இருக்கும். இந்தப்படத்துக்கு அதுகூட இல்லாமல் போனதற்கு, முன்னணி தொலைக்காட்சிகளில் இந்தப்படத்துக்கான விளம்பரங்கள் மற்றும் நிகழ்ச்சிகள் இல்லாததுதான் முக்கியக்காரணம் என்று சொல்லப்படுகிறது. 

முந்தைய வாரம் வெளியான தனிஒருவன் படம் இன்னமும் வசூலில் முன்னணியில் இருக்கிறது. அதற்குக்காரணம், அந்தப்படத்தை சன் தொலைக்காட்சி வாங்கியதால் அந்தப்படம் பற்றிய விளம்பரங்கள் இடம்பெற்றதும் ஒரு காரணம் என்று சொல்லலாம். 

தயாரிப்பாளர்களின் நலன் காக்கவேண்டிய தயாரிப்பாளர்சங்கமே பாயும்புலி படத்தின் பின்னடைவுக்குக் காரணமாக இருந்துவிட்டது என்கிற கருத்து யாரும் எதிர்பாராத ஒன்று.


Post your comment





Related News
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions