சூடு பிடிக்கிறது நடிகர் சங்க தேர்தல் களம்!

Bookmark and Share

சூடு பிடிக்கிறது நடிகர் சங்க தேர்தல் களம்!

நடிகர் சங்கத்திற்கு தேர்தல் மற்ற சினிமா சங்கங்களுக்கு நடைபெறுவது போலவே அமைதியாக நடைபெறும். ஆனால் இந்த தடவை முந்தைய காலத்து தேர்தல் போல் இல்லாமல் கடும் பரபரப்போடு கடும் போட்டியும் ஏற்பட்டுள்ளது.

தற்போது நடிகர் சங்கத்தின் தலைவராக சரத்குமார் மீதும், செயலாளராக ராதாரவியின் மீதும் ஊழல் குற்றச்சாட்டு சுமத்தியதோடு,  சரத்குமார் அணியை எதிர்த்து தேர்தலில் போட்டியிடவும்  நடிகர் விஷால் மற்றும் நாசர் தலைமையிலான அணி தயாராகி வருகிறது. 

இந்த தேர்தலில் தற்போது நிலவும் போட்டி காரணமாக வன்முறை சம்பவங்கள் நடைபெற்றுவிடுமோ என்ற அச்சமும் திரைப்படத்துறையினர் மத்தியில் ஏற்பட்டுள்ளது. 

இந்நிலையில் நடிகர் சங்கத்திற்கான தேர்தல் அக்டோபர்) 18-ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடைபெறும் தேதி என நடிகர் சங்க தேர்தல் அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் நீதிபதி பத்மநாபன் அறிவித்துள்ளார்.  

இந்த தேர்தல் மைலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் உள்ள தனியார் பள்ளியில் காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் என்றும், தேர்தல் குறித்த தகவலை நடிகர் சங்க உறுப்பினர்களுகு தபால் மூலம் அறிவிக்கப்படும் அவர் அறிவித்துள்ளார். 

நடிகர் சங்கத் தேர்தலை நடத்த லயோலா காலேஜ் பரிசீலிக்கப்பட்டது. அந்த இடத்தையே  தேர்தல் அதிகாரி அறிவிப்பார் என்று எதிர்பார்த்தார் விஷால். தான் படித்த காலேஜ் என்பதால் லயோலா காலேஜில் தேர்தல் நடந்தால் சென்ட்டிமெண்ட்டாக தனக்கு வெற்றி கிடைக்கும் என்று எதிர்பார்த்தார்.

அதற்கு மாறாக வேறு இடம் அறிவித்ததால் விஷால் கொஞ்சம் வருத்ததில் உள்ளார். இதனால் இந்த வருட நடிகர் சங்க தேர்தல் களம் சூடு பிடிக்கும்.


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions