இனியும் பொறுக்க மாட்டேன் – திருட்டு டிவிடிக்கு எதிராக விஷால் ஆவேசம்!

Bookmark and Share

இனியும் பொறுக்க மாட்டேன் – திருட்டு டிவிடிக்கு எதிராக விஷால் ஆவேசம்!

நடிகர் விஷால் திருட்டு டிவிடிக்கு எதிராக பல நாட்களாகவே குரல் கொடுத்து வருகிறார். குரல் கொடுப்பது மட்டுமல்லாமல் அதற்கு எதிரான பல நடவடிக்கைகளையும் அவர் எடுத்து வருகிறார்.

இந்நிலையில் நேற்று நடந்த மருது பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய அவர், ” 24 படத்தின் திருட்டு டிவிடி வந்துவிட்டது. அதை எடுத்தவர் யார் என்பதை கண்டுபிடித்துவிட்டேன். இனி அவரை தயாரிப்பாளர்தான் தண்டிக்க வேண்டும்.

அதேபோல் வரும் மே 20-ம் தேதி எனது மருது படம் வெளியாகவுள்ளது. படம் வெளியான அடுத்தநாள் அதன் டிவிடியும் வெளிவரும். அதற்கு தற்போதே சிலர் தயாராகி வருகிறார்கள். ஆனால் மூன்று நாட்களுக்குள் அந்த டிவிடி எந்த தியேட்டருக்குள் எடுக்கப்பட்டது என்பதை நான் கண்டறிந்துவிடுவேன்.

இந்த முறை அவர்களை பிடித்து தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சங்கத்தில் ஒப்படைப்பேன். அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் நான் என்ன செய்ய போகிறேன் என்பதை உங்களை அழைத்து சொல்வேன்” என ஆவேசமாக பேசினார்.

 


Post your comment





Related News
விஷால் படத்தில் சன்னி லியோன்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions