வேட்டையனாக மாறுகிறார் விஷால்..!

Bookmark and Share

வேட்டையனாக மாறுகிறார் விஷால்..!

பொங்கலுக்கு வெளியான ஆம்பள படம் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை. ஆனாலும் அதை ஜீரணித்து கொண்டு தற்போது அடுத்தப் படத்தில் நடிக்க தயாராகி வருகிறார். வேந்தர் மூவிஸ் தயாரிப்பில் உருவாகவிருக்கும் விஷாலின் அடுத்தப்படத்தை சுசீந்திரன் இயக்குகிறார்.

இப்படத்திற்கு வேலையில்லா பட்டதாரி படத்தின் இயக்குநரான வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார். சத்யம், வெடி படங்களைத் தொடர்ந்து இப்படத்திலும் போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார் விஷால்.

எனவே கதைக்குப் பொருத்தமாக இப்படத்திற்கு காவல் கோட்டம் என்று ஆரம்பத்தில் பெயர் வைக்கப்பட்டிருந்ததாம். காவல் கோட்டம் என்பது பிரபல எழுத்தாளர் சு.வெங்கடேசன் எழுதிய நாவல்.

2011 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமியின் விருது பெற்ற நாவல் இது. அதன் தலைப்பை தன் படத்துக்கு சூட்டுவதால் ரிலீஸ் நேரத்தில் ஏதாவது பிரச்சனைகள் வரலாம் என்று பயந்திருக்கிறார் சுசீந்திரன்.

எதற்கு வம்பு என்று...இப்படத்திற்கு வேட்டையன் என தற்போது பெயர் வைத்திருக்கின்றனர். பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடிப்பில் வெளிவந்த சந்திரமுகி படத்தில் ஃப்ளாஷ்பேக்கில் வரும் ரஜினியின் கேரக்டர் பெயர் வேட்டையன்தான்.  

சில வருடங்களுக்கு முன் சிம்பு நடிக்கவிருந்த படத்துக்கு வேட்டையன் என்று பெயர் வைக்க விரும்பினார். வேட்டையன் டைட்டிலை இயக்குனர் பி.வாசு ஏற்கெனவே பதிவு செய்து வைத்திருப்பதாகவும் அதனால் அந்த தலைப்பை பயன்படுத்த முடியாமல்போனதால் தன் படத்துக்கு வேட்டை மன்னன் என்று பெயர் வைத்தார்.

இந்நிலையில் பி.வாசுவின் அனுமதியோடு விஷால் படத்துக்கு வேட்டையன் என்ற தலைப்பை வைத்துள்ளனர். ஏப்ரல் முதல் வாரத் வேட்டையன் படப்பிடிப்பு தொடங்குகிறது.


Post your comment





Related News
விஷால் படத்தில் சன்னி லியோன்
மனைவியை பிரிந்துவிட்டேன், விவாகரத்து பெற்றதாக விஷ்ணு விஷால் தகவல்
கே.ஜி.எஃப் - வரலாற்று படத்தை தமிழில் வெளியிடும் விஷால்
2.0 டிரைலர் வெளியீடு - விஷாலுக்கு அறிவுரை வழங்கிய அக்‌ஷய் குமார்
சம்பளம் தராததால் தயாரிப்பாளர் ஆனேன் - விஷ்ணு விஷால்
சம்பள பாக்கி விவகாரம் : விஜய் சேதுபதி படத்தை விஷால் தடுத்தாரா?
சண்டக்கோழி 2 படக்குழுவின் முக்கிய அறிவிப்பு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் போட்டியிட விருப்பம் - நடிகர் விஷால்
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions