ஆதரவற்ற முதியவர்களுடன் அன்னையர் தினம் கொண்டாடிய விஷால்

Bookmark and Share

ஆதரவற்ற முதியவர்களுடன் அன்னையர் தினம் கொண்டாடிய விஷால்

நடிகர் விஷால் தற்போது பல விதங்களில் முன்மாதிரியாக இருக்க ஆரம்பித்திருக்கிறார். ரசிகர் மன்ற பணிகளை முடுக்கி விட்டிருக்கிறார். கல்வி அறக்கட்டளை ஒன்றை தொடங்கி பெண் கல்விக்கு உதவ இருக்கிறார்.

அந்த வரிசையில் அன்னையர் தினத்தை கொண்டாடியிருக்கிறார். நேற்று (மே 10) உலக அன்னையர் தினம். இதையொட்டி கீழ்ப்பாக்கத்தில் உள்ள கருணை இல்லத்துக்கு தன் தங்கையும், விஷால் ஆடியோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான ஐஸ்வர்யாவுடன் சென்றார்.

அங்கு பெற்ற மகன்களால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற 200 முதிய அன்னைகளுடன் அன்னையர் தினத்தை கொண்டாடினார். அவர்களுக்கு மதிய விருந்து அளித்ததுடன், புத்தாடைகள் கொடுத்தும் மகிழ்வித்தார்.

சுமார் 2 மணிநேரம் அவர்களுடன் இருந்து விட்டு வந்தார்.  அன்னையர் தினத்துக்கு தன் அம்மாக்களுடன் இருக்கும் படத்தை பேஸ்புக்கிலும், டுவிட்டரிலும் போட்டு பெருமைபட்டுக்கொள்ளும் நடிகர், நடிகைள் மத்தியில் விஷாலின் இந்த செயல் பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.


Post your comment





Related News
விஷாலை மிரள வைத்த அமலாபால்
சண்டக்கோழி-2 - மொத்த படக்குழுவுக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்த விஷால், லிங்குசாமி
ராஷி கண்ணாவுடன் அயோக்யாவை தொடங்கினார் விஷால்
விஷாலுக்கு ஒரு நாள் முன்னதாகவே களமிறங்கும் தனுஷ்
சண்டக்கோழி 2 திரைப்படத்தின் சிங்கிள் ட்ராக் வருகிற ஆகஸ்ட் 20 ஆம் தேதி வெளியாகுகிறது..!
நடிகர் விஷால் கேரளாவுக்கு பத்து லட்சம் ரூபாய் நிதி உதவி!
கலைஞர் மு.கருணாநிதி அவர்களின் மறைவிற்கு திரையுலகினர் நினைவஞ்சலி..!
சண்டக்கோழி 2 படக்குழுவுக்கு பரிசளித்த கீர்த்தி சுரேஷ் !
பரபரப்பான சூழ்நிலையில் நடிகர் சங்க தேர்தல் மீண்டும்!
உலகநாயகன் கமலஹாசனே செய்ய தயங்கிய வேலையை அசால்ட்டாக செய்ய இருக்கும் விஷால்- இருந்தாலும் செம தைரியம் தான்








About Tamil Star, Tamil movies, Tamil Actors, Tamil Actresses, Tamil Cinema & Kollywood
© Copyright Tamil Star Inc, 1999-2018. All rights reserved. Entertainment and Information Portal, TamilStar.com  Privacy Policy | Terms & Conditions